என் மலர்
இந்தியா

புனேவில் பாலம் இடிந்து பயங்கர விபத்து.. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள்
- பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
- தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒரு நபர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.
மாளவ் தொகுதி எம்எல்ஏ சுனில் ஷெல்கே கூறுகையில், இந்திராயணி ஆற்றில் உள்ள இந்தப் பழைய இரும்புப் பாலம் 30 ஆண்டுகள் பழமையானது. பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.