என் மலர்
இந்தியா

10 ஆம் வகுப்பு மாணவனை வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திக் கொன்ற சக மாணவன்
- வகுப்பறையில் ஆசிரியரின் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்த மாணவனை நோக்கி கத்திய மறைத்து வைத்தபடி நெருங்கினான்.
- அங்கிருந்து வெளியே ஓடிச்சென்று இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பியுள்ளான்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், ராஜ்குருநகரில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் நேற்று காலை 16 வயது மாணவன் சக மாணவனால் குத்திக் கொல்லப்பட்டான்.
இருவரும் 10 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், அவர்களுக்கு இடையே கடந்த காலத்தில் ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்
வகுப்பறையில் ஆசிரியரின் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்த மாணவனை நோக்கி கத்திய மறைத்து வைத்தபடி நெருங்கிய அந்த மாணவன் திடீரென அவனை குத்தியுள்ளான். இதில் கத்திக்குத்து பட்ட மாணவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தாக்குதல் நடத்திய மாணவன் அங்கிருந்து வெளியே ஓடிச்சென்று இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பியுள்ளான்.
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், ஆனால் அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






