என் மலர்
இந்தியா

ஒன்று சேர்ந்த குடும்பம்?.. கூட்டணி வைத்த பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் அணிகள் - ஒன்றாக தேர்தல் அறிக்கை!
- சரத் பவரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து பாஜக பக்கம் சென்றார்.
- கட்சி உடைந்த பிறகு இருவரும் ஒரே மேடையில் தோன்றியது இதுவே முதல் முறை.
மகாராஷ்டிராவில் புனே மாநகராட்சி மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. சரத் பவரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து பாஜக பக்கம் சென்றார். இன்னும் பாஜக கூட்டணியிலேயே உள்ளார்.
மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும் அஜித் பவார் உள்ளார். ஆனால் இதற்கு முரணாக நடப்பு மாநகராட்சி தேர்தலில் இரு அணிகளில் உள்ளவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.
புனேவில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அஜித்பவாரும், சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவும் ஒரே மேடையில் தோன்றி கூட்டுத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். கட்சி உடைந்த பிறகு இருவரும் ஒரே மேடையில் தோன்றியது இதுவே முதல் முறை.






