என் மலர்
நீங்கள் தேடியது "municipal elections"
- மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
- இதில் ஜல்னா மாநகராட்சித் தேர்தலில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் சுயேட்சையாக நின்று வென்றார்.
மும்பை:
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் கடந்த 2017-ம் ஆண்டு கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்மீது வெடிபொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் கர்நாடக ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலுக்கு முன் ஸ்ரீகாந்த் அப்போதைய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஜல்னா மாநகராட்சித் தேர்தலில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர் 13-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 2,621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
- தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது.
- பாஜக ஆட்சியில் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது
மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக - அஜித் பவார் தலைமையிலான என்சிபி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஆளும் கூட்டணியில் ஒன்றாக இருந்தாலும், எதிர்வரும், மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக ஓரணியாகவும் மற்றும் அஜித் பவார் என்சிபி, இந்தியா கூட்டணியில் உள்ள சரத் பாவர் என்சிபியுடன் கூட்டணி வைத்து எதிராணியாகவும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பஜகவை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ், "தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது. அஜித் தாதா வெறும் பேச்சிலேயே நேரத்தை வீணடிக்கிறார், ஆனால் நான் களத்தில் வேலை செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
பட்நாவிஸின் கருத்துக்குப் பதிலளித்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், "நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை, அரசின் தோல்விகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.
சின்ச்வாட் மாநகராட்சியில் பாஜக செய்த ஊழல்கள் மற்றும் தவறுகளைச் சொல்வது விமர்சனம் ஆகாது" என்று கூறினார்.
மேலும், பாஜக ஆட்சியில் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது உட்படப் பல முறைகேடுகளை அஜித் பவார் கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் துணை முதல்வர், முதல்வரின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது பேசுபொருளாகி உள்ளது.
- சரத் பவரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து பாஜக பக்கம் சென்றார்.
- கட்சி உடைந்த பிறகு இருவரும் ஒரே மேடையில் தோன்றியது இதுவே முதல் முறை.
மகாராஷ்டிராவில் புனே மாநகராட்சி மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. சரத் பவரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து பாஜக பக்கம் சென்றார். இன்னும் பாஜக கூட்டணியிலேயே உள்ளார்.
மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும் அஜித் பவார் உள்ளார். ஆனால் இதற்கு முரணாக நடப்பு மாநகராட்சி தேர்தலில் இரு அணிகளில் உள்ளவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.
புனேவில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அஜித்பவாரும், சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவும் ஒரே மேடையில் தோன்றி கூட்டுத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். கட்சி உடைந்த பிறகு இருவரும் ஒரே மேடையில் தோன்றியது இதுவே முதல் முறை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா நேற்று அறிவித்தார்.
மேற்கண்ட நாட்களில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். 4 கட்ட வாக்குப்பதிவும் முடிந்த பின்னர் அக்டோபர் 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும். பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு, இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் முடிவுகள் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா இன்று அறிவித்துள்ளார். #Panchayatpolls #J&KPanchayatpolls






