என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை உள்ளாட்சி தேர்தல்: கவுரி லங்கேஷ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர் வெற்றி
    X

    மும்பை உள்ளாட்சி தேர்தல்: கவுரி லங்கேஷ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர் வெற்றி

    • மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
    • இதில் ஜல்னா மாநகராட்சித் தேர்தலில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் சுயேட்சையாக நின்று வென்றார்.

    மும்பை:

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் கடந்த 2017-ம் ஆண்டு கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து பெட்ரோல் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்மீது வெடிபொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் கர்நாடக ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

    மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலுக்கு முன் ஸ்ரீகாந்த் அப்போதைய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஜல்னா மாநகராட்சித் தேர்தலில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர் 13-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 2,621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

    Next Story
    ×