என் மலர்
நீங்கள் தேடியது "university"
- சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
- 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளுக்கான 30வது ஆண்டு பட்டமளிப்பு விழா, டிசம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.
இந்திய துணைக் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2500 பேர் அமரக்கூடிய சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த 30வது பட்டமளிப்பு விழாவில், 746 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும். 2021 ஆம் ஆண்டு முதல் முதலிடம் பிடித்த 191 பேருக்கும், 2022 ஆம் ஆண்டு முதல் 191 பேருக்கும், 2023 ஆம் ஆண்டு முதல் 192 பேருக்கும், 2024 ஆம் ஆண்டு முதல் 186 பேருக்கும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் பட்டம் மற்றும் தங்கப் பதக்கங்கள் நேரில் வழங்கப்படும். மொத்தம், 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்புக்குக் காரணமான டாக்டர் உமர் உன் நபி உட்படப் கைது செய்ப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய அரியானாவின் அல்பலா பல்கலைக்கழகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுத்தன.
இந்நிலையில் டெல்லி போலீசார் பதிந்த எப்ஐஆரின் அடிப்படையில் நேற்று அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதன்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது என்றும் அல்பலா பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அறக்கட்டளையின் மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது.
- நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என இவருக்கு பல முகங்கள் உண்டு.
இவர் ஆந்திராவில் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு எம்பி ஆனார். இவர் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார்.
நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதியில் உள்ள நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமத்தை ரத்து செய்யவும் அரசுக்கு மாநில உயர்கல்வி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களிடமிருந்து ரூ.26 கோடி கூடுதலாக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து முனைவர் பட்டம் பெற மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார்.
- கணினி அறிவியலில் பி.டெக் படித்து வந்தவர்.
- நேபாள அரசு மற்றும் ஒடிசா அரசின் தலையீட்டின் பின் சமரசம் ஏற்பட்டது.
ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT)-ல் படிக்கும் நேபாள மாணவி (18) நேற்று தனது விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அந்த மாணவி கணினி அறிவியலில் பி.டெக் படித்து வந்தவர். மாணவியின் மரணம் குறித்து ஒடிசா காவல்துறை நேபாள தூதரகத்திற்குத் தகவல் அளித்துள்ளது.
இன்று உடல் எய்ம்ஸ் புவனேஸ்வரில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஒடிசா காவல்துறை தெரிவித்தது.
முன்னதாக மூன்று மாதங்களுக்கு முன்பு KIIT இல் பயின்று வந்த மற்றொரு நேபாள மாணவி பிரகிருதி லாம்சலின் தற்கொலை அங்கு அதிக எண்ணிக்கையில் பயிலும் நேபாள மாணவர்களின் போராட்டத்தைத் தூண்டியது.
நேபாள மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். நேபாள அரசு மற்றும் ஒடிசா அரசின் தலையீட்டின் பின் சமரசம் ஏற்பட்ட நிலையில் தற்போது மற்றொரு நேபாள மாணவி இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகதுக்கு செல்ல உள்ளார்.
- மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் அமெரிக்காவுக்குச் செல்வார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.
இந்த பயணத்தின்போது ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடலில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை ராகுல் சந்திக்க உள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில், ராகுல் தனது அமெரிக்க பயணத்தின் போது டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார்.
- சம்பவத்தின் பின் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தினர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 20 வயதான போனிக்ஸ் சின்கர் என்று கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின் அவரை போலீசார் சுட்டுப் பிடித்தினர்.
போனிக்ஸ் சின்கர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் ஆவார். உள்ளூர் துணை ஷெரீப் ஆன அவரது தந்தையின் துப்பாக்கியை கொண்டு அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
போலீஸ் சுட்டதில் காயமடைந்த போனிக்ஸ் சின்கர்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் சுடப்பட்டு காயமடைந்த 6 பேரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துப்பாக்கிக்கள் சுடுவதல்ல, மனிதர்கள் தான் சுடுகிறார்கள் என்று கூறினார். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் ஆகியவை ஏற்க மறுத்தன.
- "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் தெரிவித்தார்.
30 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள, கலோரி கண்காணிப்பு செயலியை உருவாக்கிய CAL AI என்ற அமரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) உள்ளவர் சாக் யாதேகரி (Zach Yadegari) (18 வயது). பள்ளியில் படிக்கும்போதே இந்நிறுவனத்தை அவர் உருவாக்கினார்.
சாப்பிடும் உணவை ஸ்கேன் செய்தால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை செயலி காண்பிக்கும்.

இளம் வயதில் உயரிய பொறுப்புடனும் மில்லியனர் ஆகவும் வளம் வருகிறார். மாதத்திற்கு 2 மில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தான் படிக்க விரும்பி விண்ணப்பத்தை பிரபல பல்கலைக்கழகங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.
இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே இத்தனை திறமையாக உருவெடுத்த இவரை அப்பல்கலைக்கழகங்கள் எப்படி நிராகரிந்தன என்பது குறித்து பலரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், சாக்கின் எக்ஸ் பதிவிற்கு பதிலளித்தார்.
- ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.
- அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
பரமக்குடி
பசும்பொன் முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைத்து மறவர் நல கூட்டமைப்பு மற்றும் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் பசும்பொன்னில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி.யுமான விஜயகுமார் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. துரைச்சாமி, செம்பிய நாடு மறவர் சங்கத் தலைவர் சி. எம். டி. ராஜாஸ் சேதுபதி, மலேசியா முக்குலத்தோர் சங்கத்தலைவர்-தொழில் அதிபர் குணாத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகைப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்றும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், அவரின் நினைவாக ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்றும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் செம்பிய நாடு மறவர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், மத்திய அரசால் நடத்தப்படுகின்ற ஐஐடி என்ஐடி, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக அதன்பயிற்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையினை குடியரசு தலைவரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமர்ப்பித்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் மெய்யநாதன் குறை கூறினார்.
மேலும் இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே பிற மாநில உரிமைக்காகவும் அதன் மாநில மொழிகளுக்காகவும் முதன் முதலில் குரல் கொடுத்ததாகவும் அதனை தமிழக முதல் அமைச்சர் தற்போதும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
- தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
- தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும்
சென்னை:
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழ நுழைவுத் தேர்வுக்கான (கியூட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் 2023-ம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத்தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் 2023 தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31-ந்தேதிகள் வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதிவு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. https://www.nta.ac.in/cuetexam என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பொது, ஓ.பி.சி., இ.டபுள்யு.எஸ். பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 650, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.550. தேர்வு கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தவேண்டும்.
கியூட் நுழைவுத் தேர்வை இந்தியாவிற்கு உள்ளே 259 நகரங்களில் உள்ள 489 தேர்வு மையங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலை தூரக்கல்விக்குழு அங்கீகாரத்துடன் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இளநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கான 2023 வருடாந்திர ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் வருகிற மார்ச் 31-ந் தேதி ஆகும்.
நெல்லை:
நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலை தூரக்கல்விக்குழு அங்கீகாரத்துடன் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இளநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்பு களுக்கும், முதுகலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரவியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், வணிகவியல் மற்றும் முதுநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் 2023 வருடாந்திர ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் வருகிற மார்ச் 31-ந் தேதி ஆகும். இப்பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தின் நேரடி சேர்க்கை மையங்களான, பல்கலைக்கழக வளாகம் மற்றும் சேரன்மகாதேவி, கோவிந்தபேரி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம்பட்டி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும், இப்பல்கலைக்கழகத் தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் கற்றல் உதவி மையங்களிலும் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி வாயிலாக பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் இப்பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக தாங்களே நேரடியாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் (www.msuniv.ac.in/Distance Education) சேர்க்கை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மனோன்மணியம் சுந்தரனார் சான்றிதழ் பட்டயப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
இவவாறு அதில் கூறப்பட்டுள்ளது.






