என் மலர்
இந்தியா

2 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்லும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி..
- ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகதுக்கு செல்ல உள்ளார்.
- மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் அமெரிக்காவுக்குச் செல்வார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.
இந்த பயணத்தின்போது ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடலில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை ராகுல் சந்திக்க உள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில், ராகுல் தனது அமெரிக்க பயணத்தின் போது டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story






