என் மலர்
உலகம்

18 வயது CEO-வுக்கு வந்த சோதனை.. சீட் கொடுக்க மறுத்த பிரபல பல்கலைக்கழகங்கள் - யார் இவர்?
- ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் ஆகியவை ஏற்க மறுத்தன.
- "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் தெரிவித்தார்.
30 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள, கலோரி கண்காணிப்பு செயலியை உருவாக்கிய CAL AI என்ற அமரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) உள்ளவர் சாக் யாதேகரி (Zach Yadegari) (18 வயது). பள்ளியில் படிக்கும்போதே இந்நிறுவனத்தை அவர் உருவாக்கினார்.
சாப்பிடும் உணவை ஸ்கேன் செய்தால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை செயலி காண்பிக்கும்.
இளம் வயதில் உயரிய பொறுப்புடனும் மில்லியனர் ஆகவும் வளம் வருகிறார். மாதத்திற்கு 2 மில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தான் படிக்க விரும்பி விண்ணப்பத்தை பிரபல பல்கலைக்கழகங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.
இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே இத்தனை திறமையாக உருவெடுத்த இவரை அப்பல்கலைக்கழகங்கள் எப்படி நிராகரிந்தன என்பது குறித்து பலரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், சாக்கின் எக்ஸ் பதிவிற்கு பதிலளித்தார்.






