ரூ. 493 கோடி முறைகேடு.. அல்-பாலா பல்கலைக்கழக தாளாளர் கைது - அமலாக்கத்துறை அதிரடி

மாணவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் கட்டணமாகப் பெற்று ஏமாற்றியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுமார் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடங்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ரூ. 493 கோடி முறைகேடு..  அல்-பாலா பல்கலைக்கழக தாளாளர் கைது - அமலாக்கத்துறை அதிரடி
Published on

கடந்த ஆண்டு டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சில மருத்துவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்கலைக்கழகத்தின் நிதி முறைகேடுகள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்த முறைகேடுகள் தொடர்பாக அல்-பாலா பல்கலைக்கழகத்தின் தாளாளர் ஜவாத் அகமது சித்திகி மற்றும் அல்-பாலா அறக்கட்டளை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற ஜவாத் அகமது சித்திகி குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்குத் தேவையான யுஜிசி அங்கீகாரம் மற்றும் என்.ஏ.ஏ.சி தகுதிச்சான்றிதழ் இருப்பதாகப் பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் கட்டணமாகப் பெற்று ஏமாற்றியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுமார் 493 கோடி ரூபாய் வரை மாணவர்களிடம் இருந்து சட்டவிரோத நிதி திரட்டப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் சுமார் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடங்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com