என் மலர்tooltip icon

    சமையல்

    கால்சியம் நிறைந்த பசலைக்கீரை தோசை
    X

    கால்சியம் நிறைந்த பசலைக்கீரை தோசை

    • பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
    • பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 200 கிராம்

    பசலைக்கீரை - அரை கட்டு

    பச்சை மிளகாய் - 2

    பெரிய வெங்காயம் - 1

    தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பசலைக் கீரையைப் போட்டு வதக்கி எடுத்து அரைத்து மாவில் சேர்க்கவும்.

    அதே எண்ணெயில் பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான பசலைக்கீரை தோசை ரெடி.

    Next Story
    ×