என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையலறை குறிப்புகள்"

    • தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
    • மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    * அடை மாவு புளித்து விட்டால் இட்லி தட்டில் இட்லி போல் மாவை ஊற்றி 7 நிமிடம் வேக வைத்து பின்பு அதை உதிர்த்து கடுகு, மஞ்சள் தூள், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து சிறிது உப்பு போட்டு வாணலியில் வறுக்க சூப்பர் அடை காரபுட்டு ரெடி.

    * பலகாரம் செய்ய எண்ணெயை கொதிக்க வைக்கும்போது சிறிது இஞ்சியை அம்மியில் அல்லது மிக்சியில் நசுக்கிப் போட்டு உபயோகித்தால் பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது. பொங்கியும் வழியாது. எண்ணெய் புகையில் வாந்தி தலை, சுற்றல் வராது.

    * வாழைக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளை சிறிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் சத்தம் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.

    * தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.

    * வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அது காய்ந்ததும் பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.

    * பிடி கொழுக்கட்டை செய்யும்போது கொதிக்கும் நீரில் கேரட், பீன்ஸ், பட்டாணி இவைகளையும் வேக வைத்து அரிசி மாவை சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.

    * கோவைக்காயை கொதிநீரில் கொட்டி 5 நிமிடம் கழித்து வடிகட்டி உப்பு, பச்சை மிளகாய் அரைத்துப்போட்டு புளித்த தயிர் கடைந்து கிளறி ஒரு நாள் ஊறவைத்து காய போட்டால் கோவைக்காய் வற்றல் ரெடி.

    * முருங்கை பூவை தேங்காய் எண்ணெயில் பொன்நிறமாக வறுத்து மோர் குழம்பில் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும், வாசம் சூப்பராக இருக்கும்.

    * மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    * வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல் பாயசத்திற்கு கொஞ்சம் வெல்லம் குறைவாகப் போட்டு கடைசியில் சர்க்கரையை கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.

    * கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து விட்டால் சீக்கிரம் கெட்டுப்போகாது, கெட்டியாகவும் இருக்கும்.

    • எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
    • பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.

    * பக்கோடா, வடை முதலியவை செய்யும் பொழுது சிறிது சோம்பு அதிகமாக சேர்த்தால் ருசி தூக்கலாக இருக்கும்.

    * வெங்காயம் வதக்கும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் நன்கு வதங்கும். சர்க்கரை வெங்காயத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மென்மைப்படுத்தும்.

    * எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.

    * பால்கோவா செய்யும்போது இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை துணியில் கட்டி பாலில் வைத்தால் பால்கோவாவின் நிறம் கிரீம் போல் கிடைக்கும்.

    * இரண்டு ஐஸ் கட்டிகள் மற்றும் கல் உப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பிளேடு கூர்மையாக மாறும்.

    * பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும்போது சிறிது பழைய சாதம் மற்றும் அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.

    * சேமியா பாயசம் செய்யும்போது சேமியா குழைந்து விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்தால் சேமியா தனித்தனியாக பிரிந்து விடும்.

    * எண்ணெய் பலகாரங்களை வைக்கும் டப்பாவில் உப்பை ஒரு துணியில் முடிச்சு போட்டு வைத்தால் காரல் வாடை வராது. நீண்ட நாட்களுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

    * தேங்காயை தண்ணீரில் நனைத்து உடைத்தால் தேங்காய் சரிபாதியாக உடையும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசையும்பொழுது சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும்.

    * தயிர் மிகவும் புளித்து விட்டால் ஒரு டம்ளர் நீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து அந்த நீரை வடித்து விட்டால், புளிப்பு நீருடன் சென்று விடும். புளிப்பில்லாத தயிர் கிடைக்கும்.

    * மீன் குழம்பு செய்யும்போது சிறிது கடுகை வறுத்து அரைத்து மீனில் தடவி ஐந்து நிமிடம் கழித்து குழம்பில் சேர்த்தால் மீன் உடைந்து போகாது.

    • மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை போட்டு வைத்தால் போதும்.
    • இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை போட்டு வைக்கலாம்.

    * கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் போதும்.

    * காப்பர் பூசப்பட்ட பாத்திரம் மங்காமல் இருப்பதற்கு சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி, துணியால் அழுத்தி தேய்த்தால் போதும். பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

    * இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் அதன் உள்பகுதியை மாவில் போட்டு வைக்கவும். மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

    * மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். பின்பு நீரை ஊற்றிவிட்டு முயற்சி செய்தால் பிளேடை எளிதாக கழற்றலாம்.

    * மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து இட்லி சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்.

    * வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் மணமாக இருக்கும்.

    * சப்பாத்தியை சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரம் காயாமல் இருக்கும்.

    * ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

    * தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும்.

    * முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டு வைத்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    • வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
    • பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம்.

    * தேங்காய்க்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்துச் சமைத்தால் குருமா புதுமையான சுவையுடன் இருக்கும்.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    * புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

    * பெருங்காயம் கட்டியாகி விட்டதா? அதில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வையுங்கள். இளகி விடும்.

    * தோசை மாவு சற்று புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் தயார் செய்யலாம்.

    * சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காதீர்கள். அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.

     

    * பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம். அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.

    * ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியல் மிகவும் ருசியாக இருக்கும்.

    * இட்லிக்கு சட்னி செய்யும்போது பொட்டுக்கடலை, தேங்காயுடன் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் ருசியாக இருக்கும்.

    * ரவா கேசரி, அல்வா போன்ற இனிப்பு வகைகள் செய்யும்போது கடைசியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பு திகட்டாது. சுவையாக இருக்கும்.

    • கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும்.
    • மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம்.

    சப்பாத்தி மாவுடன் சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கையும், சிறிதளவு பாலையும் சேர்த்து பிசைந்து தயார் செய்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    ஒரு துணியில் ஒருஸ்பூன் அளவு உப்பு முடிந்து மாவில் போட்டுவைத்திருந்தால் மாவில் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

    கொத்தமல்லி தழை, புதினா வாடி விட்டால் அவற்றை தூக்கி எறிந்துவிடாமல் மிக்ஸியில் அரைத்துப்பொடி செய்து காய்கறி வறுவலில் தூவி இறக்கினால் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும். இலைப்பாகத்தை ஈரத்துணியில் மூடி வைக்கலாம். அப்படி செய்தால் கீரைக்கட்டு வாடாமல் இருக்கும்.

    சுண்டல் கெட்டுப்போகாமல் இருக்க கொப்பரைத்தேங்காயைத் துருவி, வதக்கிப் போடவும்.

    சாதம் குழைந்து போய் விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அடுப்பை சிறு தீயில் சிறிது நேரம் வைத்துவிட்டு வடித்தால் சாதம் குழைவாக இல்லாமல் கொஞ்சம் பதமாக இருக்கும்.

    மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம். மீன் தண்ணீருக்குள் மூழ்கினால் கெடவில்லை என்பதை அறியலாம்.

    உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன்பு உருளைக்கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவ வேண்டும். பின்பு மோரில் சிறிதுநேரம் ஊற விட்டு வடித்து எடுத்து பொரித்தால் சிப்ஸ் வெள்ளையாக இருக்கும்.

    தக்காளிப் பழங்களை சிறிது உப்பு கரைத்த நீரில் போட்டு வையுங்கள். பழம் கெடாது, சுவையும் மாறாது.

    ×