என் மலர்tooltip icon

    சமையல்

    சுவையான மசாலா முட்டை பஜ்ஜி செய்யலாம் வாங்க...
    X

    சுவையான மசாலா முட்டை பஜ்ஜி செய்யலாம் வாங்க...

    • வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
    • அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை - 3

    பெரிய வெங்காயம் - 3

    கடலை மாவு - 1/4 கப்

    அரிசி மாவு - 3 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/4 ஸ்பூன்

    மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்

    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது

    கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது

    உப்பு - தேவையான அளவு

    ஆப்ப சோடா - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து பிசையவும்.

    வெங்காயத்தில் இருந்து தண்ணீர் வரும். மாவிற்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசையவும். (அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்)

    சிறிது தளர்வாக மாவை பிசைந்து மாவின் நடுவில் பாதியாக வெட்டிய முட்டையை வைத்து உருண்டையாக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் சூடானதும் மசாலா முட்டையை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டை பஜ்ஜி தயார்.

    Next Story
    ×