search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadside shop"

    • தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.
    • நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ், குழந்தைகள் ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் .

    தமிழ்த் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்'-ஆக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேரள மாநிலம் கொச்சியில் நயன்தாராவின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

    தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.




    கடந்த சில நாட்களாக அங்கு தங்கி உள்ளார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா கொச்சியில் உள்ள எம்.ஜி.ரோட்டில் உள்ள ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

    இதனை பார்த்த ரசிகர்களால் ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்து வருகின்றன.




    நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன், இரட்டை குழந்தைகள் உயிர் மற்றும் உலகா ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக காரில் வந்து ஒரு கடை முன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் நயன்தாரா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
    • குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

    அவினாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள்படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):- கடந்த ஒரு ஆண்டாக சந்தை வசூல் யார் செய்கிறார்கள். இதுவரை எவ்வளவு தொகை உள்ளது. அவினாசி நகரில் புது பஸ் நிலையம் முதல் செங்காடு திடல் வரை ரோட்டோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 3 மாதத்தில் 25 விபத்துகள் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கை கால்கள் ஊனமடைகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்துடன் வருவாய்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைதுறை ஆகியவை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தலைவர்:- ரோட்டோர கடைக்காரர்களிடம் சொன்னால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கிறது.நாங்கள் இதை வைத்துதான் ஜீவனம் செய்கிறோம் என்கின்றனர்.

    திருமுருகநாதன்(11-வது வார்டு):- காமராஜ் வீதியில் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 2 வாரத்திற்குள் மட்டும்அவினாசியில் 20 ரோட்டோர கடைகள் அதிகரித்துள்ளது. ரோட்டோர கடைகளால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ரோட்டோர ஆக்ரமிப்பு கடைகள்குறித்து ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே இதை ஒழுங்குபடுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள் குப்பை எடுக்கும் நேரம் என்ன ? வார்டு முழுவதும் சுத்தம் செய்வதில்லை. குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கருணாம்பாள்( 8-வது வார்டு):- வள்ளுவர் வீதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடிமகன்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு மது அருந்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஸ்ரீதேவி( 18 -வது வார்டு):- அவினாசி சந்தைபேட்டை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளது. இங்கு மத்தியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதற்கு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும். அவினாசிலிங்கம்பாளையம் செல்லும் ரோட்டில் 2, 3, 4, 5- வது வீதிகளில் சாக்கடை கால்வாய் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாக்கடை நீர் குட்டை போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றார்

    தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி:- நான் பேரூராட்சி தலைவராகிய நாள் முதல் தூய்மை இந்தியா திட்டம் 2.0,கலைஞர் நகர் புற சாலைகள் மேம்படுத்த திட்டம், நமக்கு நாமே திட்டம், இலங்கை தமிழர் வாழ்க்கை தர மேம்பாட்டு நிதி, நபார்டு மூலதன மானிய திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ,மாநில கட்டமைப்புவளர்ச்சி நிதி, சிறுகனிம வருவாய் மானியம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தேசியநகர்ப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாக 13 கோடியே 23 லட்சத்திற்கும், பேரூராட்சி பகுதியில் ஒரு கோடியே 45 லட்சத்திற்கும் என மொத்தம் 14 கோடியே 68 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பேரூராட்சியின் 13.3.2023பொது நிதி இருப்பு விவரம் 3 கோடியே 54 லட்சத்து 18 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்ததை தற்போது நாளது தேதியில் 48 லட்சத்து 61 ஆயிரத்து 509 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சியில் தேவையற்ற செலவுகளை குறைத்து பேரூராட்சி நிதி நிலையை பெருக்கியுள்ளோம். பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் பட்டியலில் தமிழகத்திலேயே அவினாசி பேரூராட்சி முதல் இடத்தில் உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என்றார்.

    • தினசரி சந்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்
    • உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லை என புகார்.

    திருப்பூர் :

    திருப்பூர்-பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது . இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் வந்து தங்கள் தோட்டங்களில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் உழவர் சந்தைக்கு வெளிப்புறமாக பல்லடம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து காய்கறிகளை வியாபாரம் செய்வதால் உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையோரங்களில் வாங்கி செல்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டுவதாகவும் , அதேபோல் உழவர் சந்தைக்கு அருகாமையில் உள்ள தினசரி சந்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் 8 மணிக்கு முன்பாக உழவர்சந்தை நேரத்திலேயே செயல்படுவதாலும் விவசாயிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லை என குற்றம் சாட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி காய்கறிகளை சாலையில் கொட்டி போரா ட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    இதனையடுத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உழவர் சந்தைக்கு வந்திருந்தனர். இதனை கேள்விப்பட்டு நள்ளிரவிலேயே மாநகராட்சி அலுவலர்கள் , வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையோரம் கடை அமைக்காத வகையில் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் எனவும் உழவர் சந்தையின் வசதிகள் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து விவசாயிகள் போராட்ட த்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    • சான்றிதழ் உரிய வியாபாரிகளுக்கு சென்று சேரவில்லை.
    • குடும்பத்தினர் போட்டோவுடன் விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம்.

    திருப்பூர் :

    சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. திருப்பூரில் கடந்த 2ஆண்டுகள் முன் பெறப்பட்டது. அதில் 1,154 பேர் பதிவு செய்து கொண்டனர்.

    தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சான்றிதழ் உரிய வியாபாரிகளுக்கு சென்று சேரவில்லை. பலரும் ஊரடங்கு காரணமாக தங்கள் வியாபாரத்தை விட்டு விட்டும் வேறு ஊர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று விட்டனர். இதுவரை சான்றிதழ் பெறாத வியாபாரிகள் நேரில் சென்று மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

    இதுவரை விண்ணப்பிக்காதவர்கள்ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவற்றின் நகல் மற்றும் குடும்பத்தினர் போட்டோவுடன் விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நாமக்கல்லில் சாலையோர கடைக்குள் லாரி புகுந்து மோதியதில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
    நாமக்கல்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் வழியாக சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணன் (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் நாமக்கல் அருகே வந்தது. வள்ளிபுரம் பைபாஸ் சாலை அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த பேக்கரியுடன் இணைந்த டீக்கடைக்குள் புகுந்தது.

    இந்த விபத்தில் கடையில் டீ குடித்து கொண்டு இருந்த கீரம்பூரை சேர்ந்த கண்ணன் (31) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. கடையின் முன்புற கட்டிடமும் சேதம் அடைந்தது. இதை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் டிரைவரை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நல்லிப்பாளையம் போலீசார் லாரி டிரைவரை மீட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து கண்ணனின் மனைவி ஷீலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, டிரைவர் பாலகிருஷ்ணனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் லாரி டிரைவரின் தூக்கமே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விபத்தில் இறந்த கண்ணன் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×