என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போராட்டம்"
- கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய 3 பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
- 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை:
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு-வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை அணையில் 6 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும்போது திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பது வழக்கமான ஒன்று. மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கான 45 ஆயிரம் ஏக்கர், மேலூர் ஒருபோக பாசனத்திற்கான 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கான 19 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது கள்ளந்திரி பகுதியில் மட்டும் தண்ணீர்திறக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. வைகை, முல்லை பெரியாறு அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டினாலே கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய ௩ பகுதிகளுக்கும் சேர்த்தே பாசனத்திற்கு தண்ணீர்திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில் 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தேவையான நிதி முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு 2018-ம் ஆண்டு முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்திட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 36 கண்மாய்கள், 110 கிராமங்கள் மற்றும் 5 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. விவசாயம், குடிநீர், கால்நடை தேவைக்கும் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
தற்போது போராட்டம் நடத்தி வருகிற பாசன விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையிலும், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் மதுரை மாவட்ட கலெக்டர் திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.
- போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
மதகடிப்பட்டு:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக விழுப்புரம்-புதுச்சேரி வரை 90 சதவீத பணி நிறைவு பெற்றுவிட்டது.
இந்நிலையில் புதுச்சேரி மதகடிப்பட்டு 4 வழி சாலைக்கு அருகாமையில் தமிழக பகுதியான எல்.ஆர். பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே எல்.ஆர். பாளையம் வழியாகவே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை விழுப்புரம்-புதுச்சேரி 4 வழி சாலையில் வந்து இணைகிறது.
இந்த சாலைக்கு எதிர் புறம் பிரபல மருத்துவக் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளி என அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் இந்த சாலையை கடந்தே மறுமுனைக்கு செல்ல வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோரும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும்.
ஆனால் நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.
இதனால் எல்.ஆர். பாளையம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பொதுமக்களும் அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.
இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி பாதை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் உறுதி அளித்தப்படி பாதை அமைத்து தராததால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்த போவதாக எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் அறிவித்தனர்.
அதன் படி இன்று எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
- உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
- 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன.
திருப்பூர்:
தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், காடா துணி விற்பனை சரிவடைந்துள்ளது. அண்டை நாடுகளுடன் போட்டி போட இயலாத நிலையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு துணி உற்பத்தி முடங்கியுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 5-ந்தேதி முதல் இன்று 25ந் தேதி வரை முழு உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உற்பத்தி நிறுத்தம் இன்றுடன் நிறைவடைய உள்ள சூழலில் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
இக்கட்டான சூழல் காரணமாக, உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வை வாபஸ் பெறும் என எதிர்பார்த்தோம். எந்த நடவடிக்கையும் இல்லாததால் கடந்த 20 நாட்களாக உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இதனால் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. தொழிலாளர்கள் இன்னும் முழுமையாக பணிக்கு திரும்பவில்லை. உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் மீண்டும் கலந்து ஆலோசித்து, விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
- 90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
- வரலாறு காணாத அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மதுவகைகள் கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக காகிதக் குடுவைகளில் அடைத்து விற்கப்படவுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் மது விலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார்.
மது அருந்துபவர்கள் காலியான மதுப்புட்டிகளை கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும், ஆபத்துகளையும் ஒப்பிடும் போது காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனாலும், தமிழ்நாட்டில் மது விலக்கை நடைமுறைப்படுத்தும் கோணத்தில் பார்க்கும் போது, இந்த மாற்றம் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படுவதை தாமதப்படுத்தும். அந்த வகையில் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.
இவற்றையெல்லாம் விட பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், காகிதக் குடுவைகளில் மது விற்பனை என்ற பெயரில், 90 மி.லி. மதுப்புட்டிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்படுமோ? என்பது தான்.
90 மி.லி. மதுப்புட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டால், அது தமிழ் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெருந்து ரோகமாக இருக்கும்.
90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.70 என்பது மிகவும் எளிதாக திரட்டப்படக் கூடியது.
அதுமட்டுமின்றி காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க் ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அவற்றை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதால் 90 மிலி மது வகை அறிமுகம் செய்யப்படுவது மிகப்பெரிய அளவில் சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும்.
தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு என்பது தான் மக்களின் விருப்பம். அரசின் திட்டமும் அதுவாகத் தான் இருக்க வேண்டும். அதற்கு எதிரான வகையில், 90 மிலி காகிதக் குடுவையில் மதுவை அறிமுகம் செய்து, இளைய தலை முறையினரிடம் மதுப்பழக்கத்தை அதிகரிக்க தமிழக அரசு முயன்றால் அதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. அதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரட்டி, வரலாறு காணாத அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- புலி விடாமல் தாக்கியதில் ரத்னம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போராட்டம் நடத்திய பொதுமக்கள் கூறும் போது புலி தாக்கி ரத்னம்மா இறந்த இடத்துக்கு வனத்துறையினர் வரவில்லை.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே உள்ள நஞ்சன் கூடு தாலுகா பல்லூர் ஹுண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரத்னம்மா (50). இவர் பந்திப்பூர் தேசிய பூங்கா அருகே உள்ள தனது தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு பதுக்கி இருந்த ஒரு புலி திடீரென ரத்னம்மா மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதில் புலியிடம் இருந்து ரத்னம்மா தப்பிக்க முயன்றார். ஆனாலும் புலி விடாமல் தாக்கியதில் ரத்னம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரத்னம்மாளின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஹெடியாலாவில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
போராட்டம் நடத்திய பொதுமக்கள் கூறும் போது புலி தாக்கி ரத்னம்மா இறந்த இடத்துக்கு வனத்துறையினர் வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.மேலும் அந்த புலியை உடனடியாக பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர்.
- பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை 6.25 மணியளவில் விமானம் புறப்படதயாராக இருந்தது. அதில் 154 பேர் பயணம் செய்ய இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு முன்னதாகவே பாதுகாப்பு சோதனை அனைத்தையும் முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
ஆனால் எதிர் முனையில் வர வேண்டிய விமானம் தாமதமானதால் டெல்லி விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 8 மணி வரையில் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர் இரவு 9.25 மற்றும் 10 மணியளவில் விமானம் புறப்படும் என்று அடுத்தடுத்து தெரிவித்தும் விமானம் புறப்படவில்லை.
இதேபோல் சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு, அகமதாபாத் செல்ல வேண்டிய அதே நிறுவன மற்றொரு விமானமும் இரவு 10 மணி வரையில் புறப்படவில்லை. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய இருந்த 162 பயணிகளும் டெல்லி பயணிகளுடன் சேர்ந்து போராட்டம் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் உள்நாட்டு விமான முனையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து 6.25 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக, இரவு 10.35 மணிக்கும், இரவு 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம் இரவு 10.50 மணிக்கும் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேதம டைந்த கிழக்கு வாசல் கோபுரத்தை சரிசெய்யும் பணி கடந்த 6 மாத காலமாக நிறைவடையவில்லை.
- கோவில் நிர்வாகத்தை கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் தமுக்கடித்து நூதன போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
திருச்சி
இந்து சமய அறநி லைத்துறை நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சேதம டைந்த கிழக்கு வாசல் கோபுரத்தை சரிசெய்யும் பணி கடந்த 6 மாத காலமாக நிறைவடையவில்லை.
அதனால் பள்ளி குழந்தை கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பாதை யை பயன்படுத்த மு டியாத வகையில் பாதிக்க ப்பட்டுள்ளனர். அதேபோல கோவி லுக்கு பல இடங்க ளில் நிறைய சொத்துக்கள் இருக்கும் நிலையில் தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பெருமாளை தரிசிக்க வந்து செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு, வாகனங்களை நிறுத்து வதற்கு உரிய இடத்தை கோவில் நிர்வாகம் இதுவ ரை ஒதுக்கவில்லை.
இது போன்ற குறைகளை சரி செய்யாத கோவில் நிர்வாகத்தை கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் தமுக்கடித்து நூதன போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளர் சந்துரு தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட செய லாளர் சேதுபதி ,மாவட்ட பொருளாளர் நவநீத கிருஷ்ணன், பகுதி தலைவர் லோகநாதன், பகுதி துணைத்தலைவர் ஜெயக்கு மார் ,பகுதி பொருளாளர் ரங்கராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பனிக்கனேந்தலில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை மீண்டும் அரசு எடுத்து கொள்ள வேண்டும் என்று மனு கொடுக் கப்பட்டது. இந்த மனுவை ஏற்று கொண்ட வட்டாட்சி யர் ராஜா 3 மாதத்திற்குள் தனியார் வசம் ஒப்படைக் கப்பட்ட அரசு நிலங்களை மீண்டும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 3 மாதத்திற்கு முன்பு கூறி இருந்தார்.
அதேபோல் இந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. இதை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டம் நடத்தியவர்களிடம் வட்டாட்சியர் ராஜா தலைமையில் இன்ஸ் பெக்டர் முத்துகணேஷ். மானாமதுரை நகராட்சி ஆணையர் ரங்கசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 3 மாதங்களுக்குள் அனைத்து கோரிக்கைகளும் தீர்வு காணப்படும் என அவர்கள் எழுத்து பூர்வமாக கூறியதையடுத்து இந்த போராட்டம் கைவிடப் பட்டது.
முன்னதாக போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாந்தி, மாவட்ட துணை செயலாளர் சண்முகப் பிரியா மற்றும் வருவாயத் துறை அதிகாரிகள் உமா மீனாட்சி, கார்த்திகா, சீதாலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
- ஆண்கள் பெண்கள் என்று சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி நகராட்சி பகுதியில் பணிபுரிந்து வரும் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி சுகாதார ஒப்பந்த பணியாளர்களுக்கு நாள்தோறும் ரூ. 610 ஊதியமாக வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ. 7000 வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகை மற்றும் இதர தொகைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதனை சுகாதாரப் பணியா ளர்கள் ஏற்று க்கொள்ள வில்லை. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் தொடரும் என போரா ட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இன்று தொடர்ந்து நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் போராட்டம் குறித்து விளக்கி பேசி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதில் ஆண்கள் பெண்கள் என்று சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.