என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுங்கசாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டம்
- உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- தமிழக அரசு கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டசெங்குறிச்சி சுங்கச்சா வடியில் 28-பணியாளர்கள் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 21-வது நாளாக சுங்கசாவடி பணியாளர்கள் கை கால்களை கயிறால் கட்டிப்போட்டு நூதன முறையில் செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் உடனடியாக மாவட்ட கலெக்டர், தமிழக அரசு கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தி உள்ளனர்.
Next Story






