என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொக்லைன் எந்திரத்தை மறித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொக்லைன் எந்திரத்தை மறித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொக்லைன் எந்திரத்தை மறித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இன்று சுமைதூக்கும் தொழிலா ளர்கள் கிட்டங்கி வாயில் முன்பு பொக்லைன் எந்திரத்தை மறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 மாதங்களாக தங்களுக்கு வழங்கக்கூடிய ஊதியத்தை வழங்காததை கண்டித்தும், கிட்டங்கியில் பணிக்காக பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்துக்கான வாடகை உள்ளிட்ட நிலுவைத் தொகை ரூ.3 லட்சத்திற்கும் மேல் உள்ள தொகையை வழங்காமல், அதிகாரிகள் அந்த தொகையை கையாடல் செய்ததை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.
தமிழக அரசு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
Next Story






