என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்பொருள்"

    • சுமார் 20 லாரிகள் மூலம் அரிசி மூடைகள் திங்கள் நகர் கிட்டங்கிக்கு வந்தது
    • தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

    இரணியல் :

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு கிட்டங்கியிலும் தொழிலாளர்கள் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தி ல் கல்குளம் தாலுகாவிற்கு உடையார்வி ளை, திங்கள்நகர் ஆகிய இடங்க ளில் நுகர்பொருள் வாணி கம் கிட்டங்கி உள்ளது.

    நேற்று காலை கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 லாரிகள் மூலம் அரிசி மூடைகள் திங்கள் நகர் கிட்டங்கிக்கு வந்தது. அப்போது ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்கள் தங்களுக்கு ஒப்பந்த படி கூலி வேண்டும் என்று வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் லாரி ஓட்டுனர்கள் மற்றும் தினக்கூலி தொழிலா ளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை லாரி உரிமையா ளர்கள் சங்கம் சார்பில் வெளி ஆட்கள் மூலம் லாரியில் இருந்து அரிசி மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டதாக தெரி கிறது. இதனை தினக்கூலி தொழிலாளர்கள் சங்க தலைவர் மணிகண்டன் மற்றும் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

    சங்க தலைவர் மணிகண்டன் மூட்டை மீது ஏறி அமர்ந்து கொண்டு, இந்த சம்பவம் முடியும் வரை கீழே இறங்கி வர மாட்டேன் என்று கூறினார். பின்னர் இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரி வித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் சப்- இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக திங்கள் நகர் பஸ் நிலையம் அருகே உள்ள நுகர் பொருட்கள் வாணிகம் கிட்டங்கி சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொக்லைன் எந்திரத்தை மறித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள  ஆஸ்டின்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது.  இன்று சுமைதூக்கும் தொழிலா ளர்கள் கிட்டங்கி வாயில் முன்பு பொக்லைன் எந்திரத்தை மறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    கடந்த 4 மாதங்களாக தங்களுக்கு வழங்கக்கூடிய ஊதியத்தை வழங்காததை கண்டித்தும், கிட்டங்கியில் பணிக்காக பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்துக்கான வாடகை உள்ளிட்ட நிலுவைத் தொகை ரூ.3 லட்சத்திற்கும் மேல் உள்ள தொகையை வழங்காமல், அதிகாரிகள் அந்த தொகையை கையாடல் செய்ததை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. 

    தமிழக அரசு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
    ×