என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலூர் செக்கடி பஜாரில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் ேபாராட்டம்: 300 பேர் கைது
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, அ.தி.மு.க.வினர் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சட்டமன்ற துணை தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா தலைமையில் பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு அக்கட்சியினர் திரண்டனர்.
பின்பு அவர்கள் ஊர்வல மாக நடந்து வந்து கோரிப்பா ளையம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். ஆனால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வில்லாபுரம் ராஜா மற்றும் நிர்வாகிகள் அண்ணாதுரை, எம்.எஸ். பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம், பரவை ராஜா, சோலைராஜா, குமார், கே.வி.கே. கண்ணன், சுகந்தி அசோக், பாஸ்கரன், மாயத்தேவன் உள்ளிட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு மதுரை ஆயுதப்படை மைதா னத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்
புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ், வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பேரவை பொருளாளர் பாண்டுரங்கன், அவைத் தலைவர் சொ.ராசு, மீனவர் அணி செயலாளர் பாண்டி, நாட்டாமை, பகுதி செயலாளர் சரவணன்,, வட்டச் செயலாளர்கள் எம் ஆர் குமார் மகாராஜன் நாகரத்தினம் தவிட சுப்பிர மணி ஜெயகல்யாணி வேல்ராஜ் ரகுபதி பொன் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலூரில் கைது
மேலூரில் செக்கடி பஜாரில் முன்னாள் எம்.எல். ஏ. தமிழரசன் தலைமையில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றி செழியன், நகராட்சி கவுன்சிலர் திவாகர், தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி உட்பட 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் கைது செய்தார்.
மேலூர் பஸ் நிலையம் முன்பு முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் 50 பேர் மறியலில் ஈடுபட்டனர் அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் சிலை அருகே எடப்பாடி பழனிசாமி கைது சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமங்கலம் நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, செல்லம்பட்டி ராஜா, மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில நிர்வாகிகள் ராம கிருஷ்ணன், தன்ராஜ், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சிங்கராஜ், பாண்டியன், சதீஷ்சண்முகம், கவி காசி மாயன், மகேந்திரபாண்டி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், அம்மா பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், உச்சப்பட்டி செல்வம், ஆண்டிச்சாமி, ஆதி என்ற ராஜா, காசி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






