search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Cleaners"

  • மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது.
  • அவற்றை அகற்றும் பணியில் 4 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  மதுரை மாசி வீதிகளில் தேங்கிய குப்பைகளை துணை மேயர் நாகராஜன் மற்றும் குழுவினர் அப்புறப்படுத்திய காட்சி.

   மதுரை

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பொது மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடி னர். இதனால் வீதிகள் எங்கும் குப்பை, கூளங்கள் மலைபோல் தேங்கின. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் பொதுமக்கள் வெடித்த பட்டாசுகள் மற்றும் பிளாஸ் டிக் கழிவுகள் நகரின் அடை யாளத்தையே மாற்றியுள் ளது.

  நேற்று ஒரே நாளில் மதுரை மாநகரில் மட்டும் 1,000 டன் குப்பைகள் தேங் கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரி–வித்துள்ளது. இதனை ஒரே நாளில் அப்பு றப்படுத்தும் வகையில், 4 ஆயிரம் துப்புரவு பணியா ளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 6 மணி முதல் பிற்ப கல் 3 மணிக்குள் இந்த பணி களை முடிக்க இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளது.

  கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை கார ணமாக தேங்கியுள்ள குப் பைகள் மழை நீரில் நனைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

  இதனை அப்பு றப்படுத்த தூய்மை பணியா ளர்களுக்கு கையுறை மற்றும் உபக ரணங்கள் வழங்க–வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. குறிப்பாக மதுரை மாந கரில் தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி, விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் தீபாவளி தினத்தன்று அப்பகுதிகளில் சேர்ந்த குப்பைகளை அகற் றும் பணியினை கடந்த நான்காண்டுகளாக மதுரை மாநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிறு தீபாவளி முன் னிட்டு தெற்குமாசி வீதி கீழமாசி வீதி விளக்குத்தூண் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்க ளில் நடைபெற்ற வியா பாரத்தின் போது சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியினை இன்று மாவட்டத் தலைவர் பாச வேல் சிந்தன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர் குப்பைகளை அகற்றினர்.

  இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, பொருளாளர் வேல் தேவா ஆகியோர் கலந்து கொண்ட னர்.

  இந்த பணியில் ஏராளமான வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அந்த குப்பைகள் அவனி யாபுரம் வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்பட்டன.

  • தீபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • வருகிற பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உறுதுணையாக இருந்து வெற்றியை பெற்று தர வேண்டும்.

  ராஜபாளையம்

  ராஜபாளையத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளை சார்ந்த தூய்மைப் பணியாளர்க ளுக்கு புத்தாடை, இனிப்பு களை தனுஷ்குமார்

  எம்.பி., தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

  பின்னர் தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

  கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதி யில் தொற்று பரவாத வண்ணம் தங்கள் உயிர் களையும் பொருட்படுத்தா மல் அர்ப்பணிப்பு டனும் சிறப்பாக பணி யாற்றிய முன்கள பணி யாளர்களான தூய்மை பணியா ளர்கள் அனை வருக்கும் நன்றியை தெரி வித்து கொள்கிறேன்.

  தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கட்டணமில்லா பஸ் வசதி திட்டம் போன்ற சிறந்த திட்டங்களை செயல் படுத்தக்கூடிய முதல்-அமைச்சர் நமக்கு கிடைத் துள்ளார்.

  மேலும் நமது முதல்-அமைச்சரின் சிறப்பான ஆட்சியில் ஏழை, எளிய பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தி வருகிறார். வருகிற பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க.வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உறுதுணையாக இருந்து வெற்றியை பெற்று தர வேண்டும்

  இவ்வாறு அவர் பேசினார்.

  நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பேரூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், பேரூர் செய லாளர் சிங்கப்புலி அண் ணாவி, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச் செல்வி, மாவட்ட மாண வரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைபணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  அவினாசி:

  சுதந்திர தினத்தை முன்னிட்டு அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தேசிய கொடியேற்றிவைத்தார்.

  இதையடுத்து பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைபணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராமலிங்கம், துணைத்தலைவர் மோகன், வார்டு உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

  • காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

  காஞ்சிபுரம்:

  காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக ரூ.9300 வழங்கப்பட்டு வருகிறது.

  இதற்கிடையே மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வேறொரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து உள்ளது. இந்தநிலையில் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு இன்று காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

  தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

  • துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடந்தது.
  • தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.

  மதுரை

  மதுரை மாநகராட்சி 67-வது வார்டு விராட்டிபத்து பகுதியில் 15-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினமும் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவுன்சிலர் நாகநாதன், துப்புரவு பணி செய்யும் பெண் ஒருவரை தாக்கி, தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனை மற்ற தூய்மை பணியாளர்கள் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நாகநாதன் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் கவுன்சிலர் நாகநாதன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  

  • துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர்.

  கள்ளக்குறிச்சி: 

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் பணி செய்யும் சுமார் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்  துப்புரவு பணி செய்யும் பொழுது அணிந்து கொள்ளும் மாஸ்க், கிளவுஸ், கிருமி நாசினி ஆகியவை பேரூராட்சி நிர்வாகம் வழங்காததால் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பின்றி பல மாதங்களாக பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

  தூய்மை பணியின் போது எந்த உபகரணமும் இல்லாமல் பணி செய்வதால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பணி செய்யும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இந்தப் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக துப்புரவு பணி பாதிக்கப்பட்டது. உடனடியாக துப்புரவு பணியாளருக்கு உபகரணம் வழங்கவில்லை என்றால் விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கலைந்து சென்றனர். கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் கண்டனத்திற்குறியது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.

  • குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
  • இருப்பினும் குப்பை எடுப்பதில்லை, வடிகால் அடைப்பை நீக்குவது இல்லை என நாளுக்கு நாள் புகார் அதிகரித்து வருகிறது.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை, 60 ஆயிரத்திற்கும் மேலான வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். குப்பைகள் வீடு, வீடாக சேகரிப்பது, சாலையில் கொட்டப்பட்ட குப்பைகளை சேகரிப்பது, ஓட்டல் கடைகளில் கழிவுகள் சேகரிப்பது, வடிகால் அடைப்பை நீக்கி, கழிவுநீர் எளிதில் செல்லும்படி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

  இருப்பினும் குப்பை எடுப்பதில்லை, வடிகால் அடைப்பை நீக்குவது இல்லை என நாளுக்கு நாள் புகார் அதிகரித்து வருகிறது. கடந்த மாத நகரமன்ற கூட்டத்தில் இது குறித்து அனைத்து வார்டு கவுன்சிலர்கள் புகார் கூறினார்கள். அதனால் தூய்மை பணியா ளர்களின் மேஸ்திரிகளை கூட்ட அரங்கில் வரவழைத்து புகார் வராத வகையில் பணியாற்ற வேண்டும் என சேர்மன் கமலக்கண்ணன் தூய்மை பணியாளர்களிடம் கூறினார்.

  • காங்கயம் நகர பகுதியில் வீடுவீடாக கழிவுகள் சேகரிப்பு சிறப்பு பணி நடைபெற உள்ளது.
  • புகையில்லா போகியை நடைமுறைப்படுத்த காங்கயம் நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருப்பூர் :

  போகிப் பண்டிகையை முன்னிட்டு தீயிட்டு எரிக்கப்படும் பொருட்களை எரிக்காமல் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறு காங்கயம் நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

  இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜனவரி 14ந் தேதி போகிப் பண்டிகை நாளில் வீடுகளில் இருக்கும் பழையப் பொருட்கள், டயா்கள் மற்றும் பயனில்லாத பொருட்களை தீயில் எரித்து சுகாதார சீா்கேடு ஏற்படுத்தாமல், நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்கவும்.

  இதற்காக காங்கயம் நகர பகுதியில் வீடுவீடாக கழிவுகள் சேகரிப்பு சிறப்பு பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக சுகாதார வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வாகனங்கள் மூலம் வீடுவீடாக குப்பை சேகரிக்கும்போது அவா்களிடம் போகிப் பண்டிகைக்காக தீயிட்டுக் கொளுத்த நினைக்கும் பழைய பொருட்களை ஒப்படைத்து இந்த ஆண்டு புகையில்லா போகியை நடைமுறைப்படுத்த காங்கயம் நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • காங்கயம் நகராட்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் வழங்கினாா்.

  தாராபுரம்:

  தாராபுரம் நகராட்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய தூய்மைப்பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

  தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் - என் குப்பை எனது பொறுப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில், சுகாதாரத்தைப் பேணிக்காக்க மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்துத் தர பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி அந்தந்த பகுதியில் சிறப்பாக தூய்மை செய்ததற்காக தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் வழங்கினாா்.

  தாராபுரம், தினசரி சந்தை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் வே.ராமா், நகா்மன்ற துணைத் தலைவா் ரவிசந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

  இதேபோல காங்கயம் நகராட்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் வழங்கினாா்.காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்படபலா் கலந்து கொண்டனா்.

  • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்
  • 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர்.

  கோவை:

  கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதனிடையே தூய்மை பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் 2 நாட்களில் மட்டும் 1000 ஆயிரம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் குப்பை தொட்டிகள் பல இடங்களில் நிரம்பி குப்பைகள் தேக்கத்தால் துர்நாற்றம் வீசியது. பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் கலெக்டர் சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4-ந் தேதி முதல் மீண்டும் பணிக்கு சென்றனர்.

  ஆனால் பேச்சுவார்த்தை யில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியா கவில்லை. தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனை அடுத்து தீபாவளி முடிந்த அடுத்த நாள் அதாவாது இன்று (25-ந் தேதி) முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப்போரா ட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  இதுகுறித்து தூய்மை பணியாளர் சங்கத்தினர் கூறியதாவது:-

  கடந்த அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கோவை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

  பின்னர் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று மாமன்ற கூட்டத்தில் எந்த அறிவிப்பும், தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் 3 ஆயிரம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

  4 ஆண்டுகளாக போராடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்ட கலெக்டர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் ரூ.721, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529, நகராட்சியில் ரூ.606, ஊராட்சியில் ரூ.529 என ஊதிய உயர்வு அறிவித்தார்.

  பேரூராட்சி, நகராட்சி களில் இந்த கூலி வழங்கப்பட்ட நிலையில் மாநகராட்சியில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான அரசாணை வெளியிட்ட நிலையில் கூட தற்போது வரை வழங்கவில்லை. எனவே உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அதுவரை தூய்மை பணியாளர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்.