துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடந்தது. தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.
துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
Published on

மதுரை

மதுரை மாநகராட்சி 67-வது வார்டு விராட்டிபத்து பகுதியில் 15-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினமும் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவுன்சிலர் நாகநாதன், துப்புரவு பணி செய்யும் பெண் ஒருவரை தாக்கி, தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனை மற்ற தூய்மை பணியாளர்கள் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நாகநாதன் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் கவுன்சிலர் நாகநாதன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com