search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுடன் சேர்மன் அறிவுரை
    X

    துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி சேர்மன் அறிவுரை வழங்கிய காட்சி.

    குமாரபாளையம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுடன் சேர்மன் அறிவுரை

    • குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
    • இருப்பினும் குப்பை எடுப்பதில்லை, வடிகால் அடைப்பை நீக்குவது இல்லை என நாளுக்கு நாள் புகார் அதிகரித்து வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை, 60 ஆயிரத்திற்கும் மேலான வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். குப்பைகள் வீடு, வீடாக சேகரிப்பது, சாலையில் கொட்டப்பட்ட குப்பைகளை சேகரிப்பது, ஓட்டல் கடைகளில் கழிவுகள் சேகரிப்பது, வடிகால் அடைப்பை நீக்கி, கழிவுநீர் எளிதில் செல்லும்படி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

    இருப்பினும் குப்பை எடுப்பதில்லை, வடிகால் அடைப்பை நீக்குவது இல்லை என நாளுக்கு நாள் புகார் அதிகரித்து வருகிறது. கடந்த மாத நகரமன்ற கூட்டத்தில் இது குறித்து அனைத்து வார்டு கவுன்சிலர்கள் புகார் கூறினார்கள். அதனால் தூய்மை பணியா ளர்களின் மேஸ்திரிகளை கூட்ட அரங்கில் வரவழைத்து புகார் வராத வகையில் பணியாற்ற வேண்டும் என சேர்மன் கமலக்கண்ணன் தூய்மை பணியாளர்களிடம் கூறினார்.

    Next Story
    ×