என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Agnipath scheme"
- அக்னிபாத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
- இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் வரை பணியாற்றலாம்.
மதுரை
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கான திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் வருகிற 17-ந்தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடையவர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணைய வழி தேர்வு 13.10.2023 அன்று நடத்தப்படும். கடந்த ஜூன் 27, 2003 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் டிசம்பர்-27, 2006 அல்லது அதற்கு முன்னர் பிறந்த வர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளை உடை யது. இந்திய விமானப் படையில் 4 ஆண்டுகள் வரை பணியாற்றலாம்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை பணியமர்த்தப் பட்டுள்ளனர். 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
- ரவி கிஷன் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லா (21). இவர் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். பிரபலத்தின் மகளாக இருந்தாலும் வித்தியாசமான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காக எம்.பி ரவி கிஷானுக்கும், அவரது மகள் இஷிதா சுக்லாவிற்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கிடையே, ஜூன் 16ம் தேதி அன்று, அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயது வரம்பை 21 ஆண்டுகளில் இருந்து 23 ஆண்டுகளாக மத்திய அரசு நீட்டித்தது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், ஏராளமான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லாவும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார்.
ரவி கிஷான் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் லைட் காலாட்படையின் (JAKLI) முதல் பிரிவு அக்னிவீரர்களுக்கு ஸ்ரீநகரில் நடந்த விழாவில் சான்றளிக்கப்பட்டது.
- அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டு பணியில் இருப்பார்கள்.
புதுடெல்லி:
ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர்.
அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
- கடந்த மாதம் 16-ந் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ஆன்லைன் பொதுத்தேர்வு நாடு முழுவதும் 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் :
இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு குறுகிய கால ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யும் திட்டமாக அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் இளைஞர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ராணுவத்தின் சார்பில் விழிப்புணர்வாக எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மோகனா வரவேற்றார். இதில் ராணுவத்தின் கோவை ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் கலந்து கொண்டு, ராணுவத்தில் ஏன் சேர வேண்டும் என்றும், அதன் மூலமாக ஏற்படும் பயன்கள் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்புக்கான முறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி சி.இ.இ. என்கிற பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் முதற்கட்ட தேர்வு நடைபெறும். கடந்த மாதம் 16-ந்தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். சி.இ.இ. என்னும் ஆன்லைன் பொதுத்தேர்வு நாடு முழுவதும் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும். இந்த தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். என்றார்.
இதன் பின்னர் நிருபர்களுக்கு பரத்வாஜ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:& இந்திய ராணுவப்படையில் சேவையாற்ற வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். அக்னிபாத் திட்ட தேர்வுகள் முன்பு மருத்துவம், உடற்தகுதி தேர்வுகளின் அடிப்படையில் வைக்கப்படும். ஆனால் தற்போது இணையத்தில் தேர்வு வைக்கப்பட்டு, அதில் தேர்வானவர்களுக்கு அதன்பின்னர் இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது.இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் பதிவு செய்து ரூ. 150 கட்டணம் செலுத்தி தேர்வில் பங்கேற்கலாம். இது தொடர்பான பல்வேறு கையேடுகள் கிடைக்கப்பெறுகிறது. அதேபோல் விண்ணப்பிக்கும் இணையதளத்திலும் பல்வேறு தகவல்கள் உள்ளன. அதனை பங்கேற்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு. ராணுவத்தில் சேர்த்துவிடுவதாக யாராவது பணம் கேட்டால் அதனை புகாராக தர வேண்டும். அது போன்று ஏதேனும் தகவல் இருந்தால் எங்களுக்கு புகார் அளிக்கலாம்.அவர்கள் உங்களை தவறாக வழிநடத்தக்கூடும். இதை யாரும் நம்ப வேண்டாம். இது முழுக்க முழுக்க உங்கள் திறனுடன் தான் தேர்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ராணுவத்தில் சேர்வது மற்றும் அதனால் என்னென்ன பயன்கள் உள்ளன என்பது பற்றி மாணவர்களுக்கு விளக்கப்படம் மூலமாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் ராணுவ ஆட்சேர்ப்பு துறையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது.
- நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
புதுடெல்லி :
'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு முதலில் உடல் தகுதித்தேர்வு, பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டையும் முடித்த பிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த முறைக்கு பதிலாக, இனிமேல் முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:-
அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால் இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பின்னர் உடல் தகுதித்தேர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும்.
மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தைக் குறைத்து, எளிதாக கையாளக்கூடியதாகவும் மாற்றும்.
இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த முறையில் வருகிற ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
- மத்திய அரசு அக்னிபத் என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
- அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 21 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
புதுடெல்லி:
ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதுவிதமான ராணுவ பணி நியமன முறையை டூர் ஆஃப் தி டூட்டி என்று அழைக்கிறார்கள். இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தப் பணி நியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக அதிகரித்து பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.
- மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் 13 மாதங்கள் பாதிக்கப்பட்டதாக ராகேஷ் திகாய்த் குற்றச்சாட்டு
- ராணுவத்தில் சேருவதற்காக நான்கு ஆண்டுகளாக தயாராகி வந்த அரியானா வாலிபர் தற்கொலை
நொய்டா:
ராணுவத்தில் ஒப்பந்த முறையில் வீரர்களை நியமிக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் 13 மாதங்கள் பாதிக்கப்பட்டனர். அதேபோல் இன்று தவறான முடிவினால் இளைஞர்கள் விளைவை எதிர்கொண்டுள்ளனர். ராணுவத்தில் சேர்பவர்களும் விவசாயிகளின் மகன்கள் என்பதை அரசு அறிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களுக்காகவும், நம் பிள்ளைகளுக்காகவும் கடைசி மூச்சு வரை போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ராணுவத்தில் சேருவதற்காக நான்கு ஆண்டுகளாக தயாராகி வந்த அரியானா வாலிபர், அரசாங்கம் அக்னிபாத் திட்டத்தை அறிவித்தபிறகு தற்கொலை செய்துகொண்டார். அவரது படத்தையும் ராகேஷ் திகாயித் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
- அக்னிபாத் திட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு
- இத்திட்டம் ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது.
புதுடெல்லி:
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இத்திட்டம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-
அக்னிபாத் திட்டம் சர்ச்சைக்குரியது. பல ஆபத்துகளை கொண்டுள்ளது. ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது. இத்திட்டம் ராணுவ பயிற்சியை கேலி செய்வதாக தோன்றுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட வீரர்களுக்கு நாட்டை பாதுகாக்க ஊக்கம் அளிக்கப்படும் என்பதற்கும், சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த திட்டத்தை கைவிடவேண்டும்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
- அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது
- வேலையில்லா இளைஞர்களின் பொறுமை மீது அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம் என ராகுல் எச்சரிக்கை
லக்னோ:
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பாபுவா ரோடு ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசினார்கள். அதோடு ரெயிலின் ஒரு பெட்டியிலும் தீ வைத்தார்கள்.
எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர். வேலையில்லா இளைஞர்களை அக்னிப் பாதையில் நடக்கவிட்டு, அவர்களின் பொறுமை மீது அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தையும் அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பொன்னான அடித்தளத்தையும் கொடுக்கும் என அவர் கூறி உள்ளார்.
மேலும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் ராணுவ வீரர்களுக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறை மற்றும் இதர பணிகளுக்கான ஆட்சேர்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.