search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agniveers"

    • அக்னி வீரர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் ரெயில்வே வேலைவாய்ப்பில் வயது சலுகை வழங்கவும் ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக, 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டும் பணியில் நீடிக்கலாம். மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

    இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரெயில்வே வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது சலுகை வழங்க ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.

    லெவல் 1 பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடும், லெவல் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடும் அளிக்கப்படும்.

    மேலும், முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு வயது உச்சவரம்பில் 5 ஆண்டும், அதற்கடுத்த பேட்ச் அக்னி வீரர்களுக்கு 3 ஆண்டும் வயது தளர்வு அளிக்கப்படும். உடல் தகுதி தேர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்தது.

    • அக்னிவீரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்

    புதுடெல்லி:

    சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய ஆயுதக் காவல் படைகளில், அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.

    'மத்திய ஆயுத காவல் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் கான்ஸ்டபிள்கள் (பொதுப் பணி) மற்றும் ரைபிள்மேன் பதவிக்கான ஆட்சேர்ப்பில், முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்' என்று மத்திய மந்திரி நித்யானந்த ராய் கூறினார்.

    ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் 17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 14ம் தேதி வெளியிட்டது. 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிந்த பிறகு, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மத்திய ஆயுத காவல் படை அல்லது துணை ராணுவத்தில் ஆட்சேர்ப்பின்போது, காலி பணியிடங்களில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு அமைச்சர் கண்டனம்.
    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றவர்கள் விரட்டி அடிப்பு

    பெங்களூரு:

    மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள அக்னிபாத் திட்டத்திற்கு பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

    அதன்படி, அக்னிபாத் திட்ட வீரர்கள் பணி நிறைவுக்கு பிறகு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகங்களின் பணிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அக்னிபாத் ஆள்சேர்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி பதவி காலம் நிறைவு பெறும் வீரர்களுக்கு, கர்நாடகா மாநில காவல்துறையில் பணி வழங்கப்படும் என்று அம்மாநில உள்துறை  அமைச்சர், அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் தார்வாட்டில் போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலாபவன் பகுதியில் கூடி போராட்டம் நடத்த முயன்றவர்கள் விரட்டப்பட்டதாகவும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

    • இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடை விட கூடுதலாக இருக்கும்.
    • பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தம் செய்யப்படும்.

    அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் 4 வருடங்கள் மட்டும் பணி வழங்கப்படுவதற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு, பணி நிறைவுக்கு பிறகு அவர்களின் தகுதிக்கு ஏற்ப, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கடலோர காவல்படை உள்பட 16 பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் டெல்லியில் இன்று ஆலாசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான முன்மொழிதலுக்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடை விட கூடுதலாக இருக்கும் என்று தமது டுவிட்டர் பதிவில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பான ஆட்சேர்ப்பு விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குரிய ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்ய அறிவுறுத்தப்படும் என்றும், தேவையான வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்களில் 25 சதவீதம் பேர் பணி நிறைவுக்கு பின்னர் ராணுவத்தில் வழக்கமான சேவைக்காக நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தகவல் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பு.
    • தொலை தகவல் தொடர்பு சேவைகளில் வீரர்களை பயன்படுத்துவது குறித்து விவாதம்.

    மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பணி புரியும் வீரர்களுக்கு நான்காண்டு பணி நிறைவுக்கு பின்னர் வேறு பணி வழங்குவது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தொலை தகவல் தொடர்பு சேவை வழங்கும் ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன்- ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தகவல் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்ற உள்ள வீரர்களின் திறமை, கட்டுப்பாடு, தொழில்திறன்கள் ஆகியவற்றை தகவல் தொடர்புத்துறையில் குறிப்பாக தொலை தகவல் தொடர்பு சேவைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகள் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கண்ணாடி இழை பராமரிப்பு, குளிர்சாதனங்கள் பராமரிப்பு, கடைக்கோடிக்கு தொடர்பளிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு வழங்குதல், வீடுகளுக்கு கண்ணாடி இழை அமைத்தல் போன்ற வேலைவாய்ப்புக்குரிய பகுதிகள் இந்த விவாதத்தின் போது கண்டறியப்பட்டதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

    ×