என் மலர்

  நீங்கள் தேடியது "rajnath"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடை விட கூடுதலாக இருக்கும்.
  • பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தம் செய்யப்படும்.

  அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் 4 வருடங்கள் மட்டும் பணி வழங்கப்படுவதற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு, பணி நிறைவுக்கு பிறகு அவர்களின் தகுதிக்கு ஏற்ப, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கடலோர காவல்படை உள்பட 16 பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

  இது தொடர்பாக ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் டெல்லியில் இன்று ஆலாசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான முன்மொழிதலுக்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடை விட கூடுதலாக இருக்கும் என்று தமது டுவிட்டர் பதிவில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பான ஆட்சேர்ப்பு விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குரிய ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்ய அறிவுறுத்தப்படும் என்றும், தேவையான வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

  முன்னதாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்களில் 25 சதவீதம் பேர் பணி நிறைவுக்கு பின்னர் ராணுவத்தில் வழக்கமான சேவைக்காக நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 72 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #BJPwillwin #RajnathSingh #Parliamentpolls
  புதுடெல்லி:

  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் முன்னாள் ஆளும்கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.

  அம்மாநிலத்தின் மொத்த பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உள்ள நிலையில் இருகட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தப்படி பகுஜன் சமாஜ் கட்சிக்கு 38 இடங்களும், சமாஜ்வாடி கட்சிக்கு 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், முன்னர் எலியும் பூனையுமாக இருந்த இவ்விரு கட்சிகளும் பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இன்று மாலை பதிலளித்த ராஜ்நாத் சிங் கடந்த 2017-ம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலின்போது என்ன நடந்தது என்பதை அவர்கள் மறந்து விட்டார்களா? 

  யார் வேண்டுமானாலும், எத்தனை கூட்டணிகள் வேண்டுமானாலும் அமைத்து கொள்ளட்டும். வரும் தேர்தலில் இங்குள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் 72  இடங்களுக்கு குறையாமல் பா.ஜ.க. வெற்றிபெறும் என குறிப்பிட்டார். #BJPwillwin #RajnathSingh #Parliamentpolls
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #Chidambaram
  புதுடெல்லி:

  தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #Chidambaram

  அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  தமிழகத்தில் கஜா புயல் தாக்கியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்ய 2 உயர் அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்கும்படி ராஜ்நாத் சிங்கை வேண்டுகிறேன். அப்போதுதான் இவர்களால் நேரடியாக பார்வையிட்டு முழுமையாக வெள்ளச் சேதத்தை அறிந்திட முடியும்.  மாநில அரசின் அறிக்கையை பெற்ற பிறகே மத்திய குழுவை வெள்ளச் சேத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தக் குழு சேத பகுதிகளுக்கு வருவதற்கு 2-3 வாரங்கள் ஆகிவிடும். இதற்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுது மற்றும் மீட்பு பணிகள் நடந்து விடும் என்பதால் புயலால் ஏற்பட்ட தாக்கத்தை மத்திய குழுவால் முழுமையாக கண்டறிய இயலாது. எனவே மத்திய உள்துறை அமைச்சகம் வழக்கத்தில் உள்ள இந்த நடைமுறையை மாற்றியமைக்கும்படியும் வேண்டுகிறேன்.

  இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயல் பாதிப்பால் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசும், தமிழக பாஜகவும் துணை நிற்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #gajacyclone #bjp #tngovt
  சென்னை:

  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியார்களிடம் கூறியதாவது:-
   
  கஜா புயல் அறிவிப்பு வந்த உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எனது பாராட்டுக்கள். அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசும், தமிழக பாஜகவும் துணை நிற்கும்.

  கொசுக்கள் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் மக்களுக்கு இலவசமாக கொசுவலை வழங்க வேண்டும். கஜா புயலுக்கு மத்தியில் அரசியல் புயலை யாரும் கிளப்ப வேண்டாம். என்ன உதவி வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதல்வரிடம் கேட்டுள்ளார்.
   
  இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilisai #gajacyclone #bjp #tngovt
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுக்கு எதிரான எவ்வித பயங்கரவாத செயலுக்கும் வங்காளதேசம் மண்ணில் அனுமதி இல்லை என அந்நாட்டின் உள்துறை மந்திரி இன்று தெரிவித்துள்ளார். #terroristactivities #againstIndia
  டாக்கா:

  3 நாள் அரசு முறை பயணமாக வங்காளதேசம் நாட்டுக்கு வந்துள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகள் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்களும் கையொப்பமானது.

  வங்காளதேசம் உள்துறை மந்திரி அசாதுஸ்ஸமான் கான் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்ற இந்தியா - வங்காளதேசம் உள்துறை மந்திரிகள் இடையிலான ஆறாவது உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

  பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, எல்லை பாதுகாப்பு மற்றும் எல்லை பராமரிப்பு, கள்ளநோட்டு நடமாட்டம், போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

  பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசாதுஸ்ஸமான் கான், நமது நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வகையில் பல்வேறு உளவு தகவல்களை இந்தியா பரிமாறி வருவதாக குறிப்பிட்டார்.

  பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நமது கொள்கையின் அடிப்படையில்  இந்தியாவுக்கு எதிரான எவ்வித பயங்கரவாத நடவடிக்கைக்கு நமது நாட்டு மண்ணை யாரும் பயன்படுத்த அனுமதி அளிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். #terroristactivities #againstIndia 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கவர்னர் வோராவுடன் ஆலோசனை நடத்தினார். #RajnathinJK #RajnathinAmarnath
  ஜம்மு:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. சமீபத்தில் விலக்கி கொண்டது. இதைதொடர்ந்து அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்தது.

  கவர்னர் வோரா தலைமையில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை  மந்திரி ராஜ்நாத் சிங் இருநாள் பயணமாக இன்று மாலை காஷ்மீர் வந்தடைந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட உயரதிகாரிகளும் அவருடன் வந்துள்ளனர்.

  ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தில் கவர்னரின் ஆலோசகர்கள் பி.பி.வியாஸ், தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் ஆகியோர் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர்.

  வரவேற்புக்கு பிறகு கவர்னர் மாளிகைக்கு சென்ற ராஜ்நாத் சிங், அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கவர்னர் வோரா மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

  நாளை அமர்நாத் ஆலயத்துக்கு செல்லும் அவர், அங்கு தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசிக்கிறார். ராஜ்நாத் சிங் வருகையையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #RajnathinJK #RajnathinAmarnath
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக வரும் 21-ம் தேதி மங்கோலியா நாட்டுக்கு செல்கிறார். #Rajnathsingh #Mongoliavisit
  புதுடெல்லி:

  புதுடெல்லியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 21-ம் தேதி மங்லோலியா நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். 24-ம் தேதிவரை அங்கு தங்கி இருக்கும் அவர், இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்படும் எண்ணை சுத்திகரிப்பு ஆலை பணிகளின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

  மங்கோலிய தலைநகர் உல்லன்பாட்டர் நகரில் அந்நாட்டின் அதிபர், பிரதமர், துணை பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்டோரை சந்திக்கும் ராஜ்நாத் சிங், இந்தியா - மங்கோலியா இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #Rajnathsingh  #Mongoliavisit 
  ×