என் மலர்
செய்திகள்

அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசும், தமிழக பாஜகவும் துணை நிற்கும் - தமிழிசை
கஜா புயல் பாதிப்பால் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசும், தமிழக பாஜகவும் துணை நிற்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #gajacyclone #bjp #tngovt
சென்னை:
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியார்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் அறிவிப்பு வந்த உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எனது பாராட்டுக்கள். அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசும், தமிழக பாஜகவும் துணை நிற்கும்.
கொசுக்கள் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளதால் மக்களுக்கு இலவசமாக கொசுவலை வழங்க வேண்டும். கஜா புயலுக்கு மத்தியில் அரசியல் புயலை யாரும் கிளப்ப வேண்டாம். என்ன உதவி வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதல்வரிடம் கேட்டுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilisai #gajacyclone #bjp #tngovt
Next Story