என் மலர்
செய்திகள்

மங்கோலியா நாட்டுக்கு ராஜ்நாத் சிங் 21-ம் தேதி பயணம்
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக வரும் 21-ம் தேதி மங்கோலியா நாட்டுக்கு செல்கிறார். #Rajnathsingh #Mongoliavisit
புதுடெல்லி:
புதுடெல்லியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 21-ம் தேதி மங்லோலியா நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். 24-ம் தேதிவரை அங்கு தங்கி இருக்கும் அவர், இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்படும் எண்ணை சுத்திகரிப்பு ஆலை பணிகளின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
மங்கோலிய தலைநகர் உல்லன்பாட்டர் நகரில் அந்நாட்டின் அதிபர், பிரதமர், துணை பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்டோரை சந்திக்கும் ராஜ்நாத் சிங், இந்தியா - மங்கோலியா இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #Rajnathsingh #Mongoliavisit
Next Story