என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருப்பு சட்டை அணிந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்
- கருப்பு சட்டை அணிந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கையை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த 28 நபர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த 1 ந்தேதிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே தொழிலாளர் நலத்துறை உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்றுடன் 25 வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் கருப்புச்சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர். இந்த தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளியாக உள்ளதென தெரிவித்துள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
Next Story






