search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "பலி"

  • கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
  • தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

  மதுரை:

  மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 78). இவர், தெற்குமாசி வீதியில் டி.எம். கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் கீழ்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், 2-ம் தளத்தில் குடோனும் உள்ளன.

  நேற்று இரவு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகைகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று 7.30 மணி அளவில் கடையின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது.

  இதைப்பார்த்த கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதற்கிடையே உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45) முதல் தளத்தில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்களை வெளியேற்றவும் விரைந்து சென்றார். அப் போது அங்கு மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிவதாக கூச்சல் போட்டார்.

  ஆனால் அதற்குள் முதல் தளத்தில் புகை மூட்டம் அதிகமானது. எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு புகை அடைத்துக் கொண்டதால் அவரால் கீழே வர முடியவில்லை. முன்னதாக அந்த தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். கீழ் தளத்தில் இருந்தவர்கள் மோதிலாலின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அதனை எடுக்கும் நிலையில் மோதிலால் இல்லை. இதனால் அங்கு பதற்றம் அதிகமானது.

  இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விபத்தில் மோதிலால் சிக்கிக்கொண்ட முதல் தளத்திற்கு சென்றனர். மேலும் தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

  இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் கடையின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது மோதிலால் ஒரு அறையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

  அந்த கதவையும் உடைத்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அளவுக்கு அதிகமான புகையை சுவாசித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள் ளது. பின்னர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

  இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மூச்சுத்திணறி பலியான மோதிலாலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

  • எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.
  • குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வேலூர்:

  வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே சந்தப்பேட்டை பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  இதனால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 65).

  இவர் இன்று காலை பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் அருகில் நடந்து சென்றார்.

  அப்போது எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.

  இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மூதாட்டியை மீட்க முயன்றனர். முடியாததால் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பிணமாக மீட்டனர்.

  இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

  • ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.
  • செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

  வண்டலூர்:

  கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயரம்பேடு ஊராட்சி, மூலக்கழனி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு தீபாவளியையொட்டி உறவினரான திருநெல்வேலி மாவட்டம், திசையன் விளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) வந்து இருந்தார். கடந்த 14-ந் தேதி சந்திர சேகரனும், முத்துப்பாண்டியும் சேர்ந்து கடையில் இருந்த போது மதுகுடித்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.

  இதில் பலத்த காயம் அடைந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முத்துப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சந்திரசேகரனை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

  தேவகோட்டை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
  தேவகோட்டை:

  தேவகோட்டை அருகே உள்ள கொசவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து மகன் பசுபதி (வயது26), அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முத்து, புதுக்கோட்டை மாவட்டம் பொண்ண மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜ் மகன் மகாலிங்கம் என்ற அருண் (24).

  இவர்கள் 3 நபர்களும் காரைக்குடியிலிருந்து கொசவக்கோட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சடையன்காடு அருகே வரும் பொழுது எதிரே காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அப்துல்அஜீத் என்பவர் ஓட்டிவந்த காரும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

  இதில் சம்பவ இடத்திலேயே பசுபதி, மகாலிங்கம் என்ற அருண் ஆகியோர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். என்ஜினீயர் அப்துல் அஜித் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த முத்து இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தாலுகா ஆய்வாளர் சுப்பிர மணியன் ஆறாவயல் சார்பு ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர் வாகன விபத்து நடந்து வரும் சூழலில் நேற்று நடந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானது குறித்து காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு அதிவேகத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.

  கூத்தம்பூண்டி அருகே ஏரியில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியானார்.
  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அருகே கூத்தம்பூண்டி அண்ணமார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 50). கூலித ்தொழிலாளி. இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். பழனி சற்று மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

  இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்து கூத்தம் பூண்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணிக்கம்பாளையம் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்ற பழனி திரும்ப வீட்டுக்கு வரவில்லை.
   
  பல இடங்களில் தேடி பார்த்தும் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று  மாணிக்கம்பாளையம் ஏரி பகுதிக்கு சென்றவர்கள் ஒரு ஆண் பிரேதம் இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். 

  இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

  போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர் பழனி என்று தெரியவந்தது. அவர் ஏரியில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 

  இதையடுத்து பழனியின் உடலை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பாடகர் எடவா பஷீர் மறைவுக்கு கேரள திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.
  கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் எடவா பஷீர் (78). இவர் மலையாள இசையுலகில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

  இந்நிலையில், கேரளாவின் ஆலப்புழாவில் ப்ளூ டயமண்ட் இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எடவா பஷீர் மேடையில் பாடல்களை பாடினார்.

  எடவா பஷீர் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தபோது திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், எடவா பஷீரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அங்கு, எடவா பஷீர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  

  பாடகர் எவடா பஷீர் உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  இதையும் படியுங்கள்.. 4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்
  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  பஹ்ரைச்- லக்கீம்பூர் நெடுஞ்சாலையில் இன்று கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து அயோதிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோதிபூர் பகுதுியில் உள்ள நனிஹா சந்தையில் நுழைந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

  பேருந்து ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார தேடி வருகின்றனர். சம்பவத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

  இதையும் படியுங்கள்.. மணிப்பூர் கக்சிங் பகுதியில் தீவிரவாதி கைது
  பரமத்தி அருகே பாம்பு கடித்து வட மாநிலத் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டியைச் சேர்ந்தவர் பொன்னர்.இவரது விவசாய தோட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம்,கொண்டேகாவ் மாவட்டம், கிரோலா பகுதியை சேர்ந்த பஜாருகொர்ரம் என்பவரது மகன் சன்னத்ராம்(20)  கூலி வேலை பார்த்து வந்தார். 

  கடந்த 20-ந் தேதி இரவு சன்னத்ராமை பாம்பு கடித்தது. சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி    உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  பரமத்தி வேலூரை அடுத்த ‌‌எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து.‌இவரது மனைவி பாப்பாத்தி (70). இவரை கடந்த 22-ந் தேதி  பாம்பு கடித்தது.

  சேலம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
  லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்றபோது வாகனம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

  இதையும் படியுங்கள்.. சொத்துக் குவிப்பு வழக்கு - அரியானா முன்னாள் முதல் மந்திரிக்கு 4 ஆண்டு சிறை
  தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
  தாரமங்கலம்:

  சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

  இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

  மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.