search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "drowning"

  • 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கருங்கல்:

  புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரி தற்போது செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. கல்குவாரியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

  அந்த பகுதியில் இளைஞர்கள் அவ்வப்போது சென்று குளித்து வந்தனர். பனங்காலைமுக்கு பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ராஜேஷ் (38). இருவரும் நேற்று மாலை கல்குவாரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளிக்க சென்றனர். அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்கள்.

  இது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஜெகன், ராஜேஷ் குறித்து எந்த தகவல் கிடைக்கவில்லை. இரவு இருள் சூழ்ந்து விட்டதையடுத்து தேடும்பணி நிறுத்தப்பட்டது.

  இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக மீண்டும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஜெகன், ராஜேஷ் இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட இருவரையும் தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கல்குவாரியில் குளிக்க சென்ற இடத்தில் நண்பர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடத்தூர்:

  தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கல்லூரி பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது . இங்கு 100 மாணவர்கள் தங்கிபடித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக நாகராஜ், சமையலராக மெணசியை சேர்ந்த சிலம்பரசன், வாட்சமேனாக தங்கவேல் ஆகிய 3 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

  நேற்று முதல் 3 நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

  சுமார் 20 மாணவர்கள் மட்டுமே விடுதியில் இருந்தனர்.

  இதில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இளங்குன்னி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரேம்குமார், (19) முதலாம் ஆண்டு இயற்பியல் படிக்கும் பூபதி, (17) ஆகிய 2 பேரும் நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு, வாணியாறு அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

  அப்போது அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார். அப்போது அணையில் சேற்றில் சிக்கி பிரேம்குமார் உயிருக்கு போராடியுள்ளார். அவரை பூபதி காப்பாற்ற முயற்சி செய்தும் முடியாமல் போகவே, கூச்சலிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  தகவலின் பேரில் வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர், போலீசாரும் அணையில் இருந்து சடலமாக பிரேம்கு மாரை மீட்டனர். புகாரின் படி போலீசார் விசாரிக்கின்றனர்.

  • மீன் பிடிக்க சென்றபோது விபரீதம்
  • போலீசார் விசாரணை

  அரக்கோணம்:

  காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது சலாவுதின் (வயது 43). திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன், 1மகள் உள்ளனர். முகமது சலாவுதின் அரக்கோணம் பாப்பாங்குளம் பகுதியில் தங்கி பழைய இரும்பு பொருள் வாங்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சலாவுதின் நேற்று அதி காலை சுமார் 5 மணியளவில் மங்கம்மாபேட்டை பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

  அப்போது திடீரென சலாவுதின் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

  இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரியில் இருந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • குளிக்கச் சென்றபோது பரிதாபம்
  • டாக்டர் இல்லாததே இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

  வாணியம்பாடி:

  வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுடைய மகன் திவாகர் (வயது 12).

  முருகன் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் குடும்பத்துடன் சென்று அங்கு வேலை செய்து வந்த தாக கூறப்படுகிறது.

  திவாகர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இந்த நிலையில் தங்களது சொந்த ஊரான புத்துக்கோ வில் பகுதியில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தனர்.

  திருவிழா முடிந்து நேற்று முருகன், திவாகர் மற்றும் உற வினர்களுடன் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.

  அப்போது திவாகர் தண்ணீரில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை கண்ட தந்தை மற்றும் உறவினர்கள் அவனை மீட்டு ராமநாயக் கன்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

  அங்கு டாக்டர் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே திவாகர் பரிதாபமாக இறந்தார்.

  இதனை அறிந்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி பார்ப்போரை நெஞ்சை உருக்கியது.

  இச்சம்பவம் குறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • குட்டையில் குளிக்கச் சென்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

  ஜோலார்பேட்டை:

  ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி அன்பழகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் இவரது மகன் சந்துரு (வயது 16) மற்றும் இவரது தம்பி தினேஷ் (வயது 14) ஆகியோர் நண்பர்கள் கவியரசு, மாதேஷ் நேற்று அருகில் உள்ள பெரிய ஆண்டவர் கோவில் குட்டையில் குளிக்க சென்றனர்.

  தண்ணீரில் குளித்து கொண்டிருந்த போது முட் செடியில் மாட்டிக் கொண்டார்.

  இதனால் இவரது தம்பி தினேஷ் மற்றும் நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். சந்துருவை காப்பாற்ற முடியாததால் தினேஷ் உடனடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் சந்துருவை காப்பற்ற ராமநாதன் குட்டையில் குதித்து முட் புதரில் சிக்கிக்கொண்ட சத்துருவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் சோதித்த போது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இது சம்பந்தமாக ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்க பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.

  குட்டையில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கிய இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

  • குளத்தில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
  • மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலூர்

  மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மருதூர் இந்த ஊரைச் சேர்ந்தவர் பாசி என்ற பாரதி (வயது 48), ெதாழிலாளி. இவர் நேற்று மாலை அங்குள்ள கிழவிகுள ஓடையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதமாக தவறி விழுந்து தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

  அவரது உடல் தண்ணீரில் மிதந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பாரதி உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • மதுரையில் குளத்தில் மூழ்கி சிறுவன்-முதியவர் பரிதாபமாக இறந்தனர்.
  • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மதுரை

  மதுரை செல்லூர், சிவகாமி தெருவை சேர்ந்த முபாரக் மகன் கணவாய் உசைன் (வயது 11). இவர் சம்பவத்தன்று மாலை புது நத்தம் ரோடு நாராயணபுரம் கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது தண்ணீருக்குள் மூழ்கியவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

  இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை திருப்பரங்கு ன்றம், ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் கணேசன் (71). இவர் நேற்று மதியம் சரவணப் பொய்கையில் குளிக்க சென்றார்.

  அப்போது குளத்துக்குள் நிலைதடுமாறி விழுந்தவர் தண்ணீருக்குள் மூழ்கிப் பரிதாபமாக இறந்தார்.

  இது தொடர்பாக மகள் மீனாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கூத்தம்பூண்டி அருகே ஏரியில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியானார்.
  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அருகே கூத்தம்பூண்டி அண்ணமார்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 50). கூலித ்தொழிலாளி. இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர். பழனி சற்று மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

  இந்த நிலையில் அவர் மும்பையில் இருந்து கூத்தம் பூண்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணிக்கம்பாளையம் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்ற பழனி திரும்ப வீட்டுக்கு வரவில்லை.
   
  பல இடங்களில் தேடி பார்த்தும் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று  மாணிக்கம்பாளையம் ஏரி பகுதிக்கு சென்றவர்கள் ஒரு ஆண் பிரேதம் இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். 

  இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

  போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர் பழனி என்று தெரியவந்தது. அவர் ஏரியில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 

  இதையடுத்து பழனியின் உடலை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஆவடியை அடுத்த பட்டாபிராமில் கிணற்றில் மூழ்கி பலியான மாணவன் உடல் மீட்கப்பட்டது. இதனை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

  திருநின்றவூர்:

  ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபி (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தார்.

  நேற்று மதியம் அவர் நண்பர்கள் 5 பேருடன் பாலவீடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். முதலில் கோபி கிணற்றுக்குள் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

  இதுபற்றி அவர்கள் கோபியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் கோபியை மீட்க முடியவில்லை.

  இதைத்தொடர்ந்து ராட்சத மோட்டார் கொண்டு வரப்பட்டு கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றினர். நள்ளிரவில் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் கோபியை பிணமாக மீட்டனர். இதனை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

  இதுகுறித்து பட்டாபிராம் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன், முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கிணற்றில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

  பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவாளவாடி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பகவதி. இவரது மகன் நிர்மல் (23).இவர் பொள்ளாச்சி அருகே உள்ள செல்லக்காம்பட்டியில் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்தார்.

  இது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.