குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

குளத்தில் மூழ்கி தொழிலாளி இறந்தார். மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குளத்தில் மூழ்கி பலியான பாரதி.
குளத்தில் மூழ்கி பலியான பாரதி.
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மருதூர் இந்த ஊரைச் சேர்ந்தவர் பாசி என்ற பாரதி (வயது 48), ெதாழிலாளி. இவர் நேற்று மாலை அங்குள்ள கிழவிகுள ஓடையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதமாக தவறி விழுந்து தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

அவரது உடல் தண்ணீரில் மிதந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பாரதி உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com