search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Building Collapses"

    • ப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
    • இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் சச்சின் பாலி கிராமத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த பயங்கர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

    இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வேறுயாரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்த கட்டிடம் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். இந்த கட்டிடங்களில் 5 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

    2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், வெறும் 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்.
    • பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.

    குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் சச்சின் பாலி கிராமத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த கட்டிடம் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். அங்கு வசிக்கும் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறுமாறு சூரத் நகராட்சி வலியுறுத்தியுள்ளது.

    சம்பவத்தை தொடர்ந்து, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

    இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரானில் நடந்த 10 மாடி கட்டிட விபத்து தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டின் தெற்கு பகுதி நகரான அபடானில், அமீர் கபீர் தெருவில் அமைந்த 10 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்தது. இந்த சம்பவத்தில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பிற நகரங்களில் இருந்து அவசரகால குழுக்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2 மோப்ப நாய் குழுக்களும், ஹெலிகாப்டர் ஒன்று மற்றும் 7 மீட்பு வாகனங்களும் சென்றன.

    அவர்கள் சென்றபோது, அந்த பகுதியில் வசித்த குடியிருப்புவாசிகள் நகர அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அவர்களை அமைதிப்படுத்தி விட்டு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    ஈராக்கை ஒட்டிய எல்லை பகுதியில் அமைந்த அந்த நகரில் இருந்த கட்டிடத்தில் வணிகத்திற்கான கடைகள் அமைந்துள்ளதுடன், குடியிருப்புவாசிகளும் வசித்து வந்துள்ளனர். இந்த கட்டிட விபத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 80 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள குஜஸ்தான் மாகாண நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


    • காசியாபாத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
    • தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி நகரின் ரூப் நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒரு தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

    கட்டிடம் இடிந்து விழுந்தபோது 10 முதல் 15 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் கூறினர்.

    தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    மும்பையில் கட்டுமானப் பணியின்போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். #MumbaiAccident #BuildingCollapses
    மும்பை:

    மும்பை தாராவியில் உள்ள பிஎம்ஜிபி காலனியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சாலையோரம் நின்றவர்கள், சாலையில் சென்றவர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தன. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புபடையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.  

    இந்த விபத்து குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “இரவு 10.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர் ஆட்டோ டிரைவர். பைக்கில் சென்ற ஒருவர் பலத்த காயமடைந்தார். அவரை நாங்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்” என்றார். #MumbaiAccident #BuildingCollapses
    ×