என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்டிட விபத்து"
- வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
- ரெசிப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள பெர்னாம்புகோ மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர நகரமான ரெசிப் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், ரெசிப் அருகே உள்ள ஜங்கா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 3 பேரை காணவில்லை. அவர்களை மீட்புக்குழுவினர் தேடிவருகின்றனர்.
இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்து மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி 2010ம் ஆண்டு மூடப்பட்டதாகவும், அதன்பின்னர் பல குடும்பங்கள் சட்டவிரோதமாக அங்கு குடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
- கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது.
- உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
தற்போது கட்டிடம் 70 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது. இன்று காலை கட்டிடத்தின் படிக்கட்டு அமைந்துள்ள பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த ஜோதி (52), மூக்காயி (50), தொண்டிச்சாமி (55), கட்டையன்(43) ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது படிக்கட்டு, சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேரும் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த கூடல்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றினர்.
அப்போது அதில் சிக்கியிருந்த மூக்காயி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தலைமறைவான கட்டிட பொறியாளர், காண்டிராக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கட்டிட விபத்தில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தஹு.
இந்த விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. தரை தளத்தில் பல கடைகள் உள்ளன.
நேற்று முதல் தளத்தில் இரண்டாவது தளத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
