என் மலர்
நீங்கள் தேடியது "apartment"
- அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானது
ஹாங்காங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தீவிபத்தினால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு மேலுள்ள தளங்களுக்கும் பரவியது.
- அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை
டெல்லியில் மாநிலங்களவை எம்.பி.களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்று மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
பிஷம்பர் தாஸ் மார்க்கில் உள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளில் தீ விபத்து ஏற்பட்டு மேலுள்ள தளங்களுக்கும் பரவியது. உடனே உள்ளிருந்த மக்கள் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவரிக்கப்பட்டது.
மதியம் 1:20 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தன.
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, தீயணைப்பு வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தீயை அணைக்கும் உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.
இதுவரை மூன்று பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர்.
- 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தஹிசர் பகுதியில் உள்ள 23 மாடி கட்டிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்தனர்.
பிற்பகல் 3 மணியளவில் குடியிருபின் ஏழாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் தகவலறிந்து அங்கு விரைந்தனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மாலை 6:10 மணிக்கு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மீட்புக் குழுவினர் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர். இவர்களில் 19 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அருகில் வசிக்கும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியியுள்ளனர்.
- கட்டிடத்தின் 3 மாடிகளும் இடிந்து விழுந்துள்ளன.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெல்கம் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிடத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அருகில் வசிக்கும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியியுள்ளனர்.
மீட்பு பணிகளில் ஒரு ஆன் மற்றும் ஒரு பெண்ணின் உடல் மீட்க்கப்பட்டது. மேலும் ஒரு வயது குழந்தை உட்பட 8 பேர் காய்நகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்களை மீட்கும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிடத்தின் 3 மாடிகளும் இடிந்து விழுந்துள்ளன.
- குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜ்கோட் 150 ரிங் ரோட்டில் அமைந்துள்ள அட்லான்டிஸ் என்ற 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் 6 ஆவது மாடியில் இன்று காலை தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து அங்கு வசித்த 50 பேரை பத்திரமாக மீட்க்கப்பட்டனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவரை இன்னும் காணவில்லை என்று காவல் கண்காணிப்பாளர் சௌத்ரி தெரிவித்தார். மேலும் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சார்ட் சர்கியூட் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
- குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது.
அவிநாசி :
நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 173 வீடுகள் பூட்டியிருப்பதாகவும், பலரும் வாடகைக்கு விட்டு வெளியில் தங்கியிருப்பதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து வாழ்வாதார மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சரவணபிரபு, குடியிருப்புவாசிகளுக்கு அறிவுரை, ஆலோசனை வழங்கி கூறியதாவது:- நம் குடியிருப்பு, நம் பொறுப்பு என்ற திட்டத்தில், குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஏற்படுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். குடியிருப்புகளை சுத்தம், சுகாதாரமாக பராமரிப்பது, குடிநீர் திறந்து விடும் பணி மேற்கொள்வதற்கு பணியாட்களை நியமிப்பது, அவர்களுக்கு சம்பளம் வழங்குவது, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவது, சுற்றுச்சுவர் எழுப்புவது, 'சிசிடிவி' கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகளை, குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடியிருப்புவாசிகளிடம் இருந்தும் மாதம் 250 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.
இந்த வீடுகள் யார் பெயரிலும் பதிவு செய்யப் படவில்லை. மாறாக 10 ஆண்டுகள் அதில் குடியிருந்த பிறகு வீடுகளை விற்றுக் கொள்ள விற்பனை சான்றிதழ் வழங்கப்படும். குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு சந்தா வழங்காமல் சங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது வீடுகளை வாடகை, போக்கியத்துக்கு விட்டு வெளியில் வசிப்பது, டம்மி பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு, பிறருக்கு வீடுகளை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும்.
அடுத்த மாதம் வாரியத்தின் எஸ்டேட் அலுவலர், வீடு தோறும் ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்திய பின் இந்நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு பின், வீடுகளை விற்க விற்பனை சான்றிதழ் பெற வேண்டுமானால் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும்.
குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தடையின்றி கிடைப்பதால், பலர் தண்ணீரை விரயமாக்குகின்றனர்.அனாவசியமாக செலவழிக்கின்றனர். எனவே காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்வெல் தண்ணீர் தடையின்றி வினியோகிக்கப்படும் என்றார்.
- தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
- 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நாமக்கல்:
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் அடிப்படையில் ரூ.405 கோடி செலவில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
இதை அடுத்து 4500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 105 தொகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்டுவதற்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.3 கோடி மதிப்பிலான பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.
இதை ஒட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இதில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
- கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி
அரவேணுவில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தை இணைக்கிறது. இதில் தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவும் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இது ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமராவில் பதிவாகி உள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
- அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னையில் 9 இடங்களில் 3,238 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
அதன்படி நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பெரியார் நகர் திட்டப்பகுதியில் ரூ.81.64 கோடி மதிப்பீட்டில் 448 புதிய குடியிருப்புகள், காந்தி நகர் திட்டப்பகுதியில் ரூ.83.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வேம்புலியம்மன் திட்டப்பகுதியில் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பத்ரிக்கரை திட்டப்பகுதியில் ரூ.32.30 கோடி மதிப்பீட்டில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில் ரூ.29.85 கோடி மதிப்பீட்டில் 170 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஆண்டி மான்யம் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ118.53 கோடி மதிப்பீட்டில் 702 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.41.08 கோடி மதிப்பீட்டில் 252 புதிய அடுக்குமாடி குடியி ருப்புகள் மற்றும் பருவா நகர் திட்டப்பகுதியில் ரூ.61.13 கோடி மதிப்பீட்டில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என ரூ.556.60 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் குறு சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர் அபூர்வா, வாரிய மேலாண்மை இயக்குனர் பொ. சங்கர், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் நே.சிற்றரசு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
- திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.
பெங்களூரு நகரில் கடந்த 7 ஆண்டுகளாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை திருடிய 2 திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருடர்களை கைது செய்த பின்பு அவர்களது வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர்.அப்போது, 715 -ற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் ஆகும்.
இரவு நேரங்களில் ஆட்டோவில் வந்து அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.
அண்மையில், வித்யாரண்யபுரா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஷூக்கள் மற்றும் 2 கேஸ் சிலிண்டர்களை இவர்கள் திருடியுள்ளனர். இது தொடர்பாக வீட்டுக்காரர் புகார் கொடுக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளிகள் பயன்படுத்திய ஆட்டோ விவரங்களை கண்டறிந்து 2 திருடர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
- அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்தார்.
- சேத்தன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்தார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (திங்கள்கிழமை) காலை மைசூருவில் விஸ்வேஸ்வரய்யா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
போலீசாரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் சேத்தன் (45), அவரது மனைவி ரூபாலி (43), அவர்களது 15 வயது மகன் மற்றும் சேதனின் தாயார் பிரியம்வதா (62) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சேத்தன் முதலில் மூவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.
சேத்தனின் தாயார் பிரியம்வதா குடியிருப்பின் ஒரு வீட்டில் இறந்து கிடந்தனர். அதில் அவர் தனியாக வசித்து வந்தார். மற்ற மூவரும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்த மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தனர்.
அமெரிக்காவில் வசிக்கும் தனது சகோதரர் பரத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சேத்தன் போன் செய்து, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்யபோவதாக கூறியுள்ளார். பரத் உடனடியாக ரூபாலியின் பெற்றோரை அழைத்து சேத்தனின் வீட்க்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
ஆனால் ரூபாலியின் பெற்றோர் அங்கு சென்றபோது ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து கிடந்தனர். காலை 6 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வித்யாரண்யபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சேத்தன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் வேலை செய்துவந்ததாகவும் நிதி நெருக்கடி காரணமாக அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கடித்தத்தில் சேதன் எழுதியதாவது, எனது மரணத்திற்காக எனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை காவல்துறை துன்புறுத்தக்கூடாது. இதற்கு நானே பொறுப்பு.






