search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thieves"

    • வெங்கடேஷ் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றார்.
    • நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள வெங்கட்டம் குப்பத்தை சேர்ந்த முரளிநாயுடு மகன் வெங்கடேஷ் (29) என்ஜினீயர். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றார். பின்னர், 17-ந்தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • இந்த கோவிலில் மூலவர் சன்னதி கட்டடத்தால் கட்டப்பட்டு உள்ளது.
    • உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் புதுக்குப்பம் அருகே புதுநகர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் சன்னதி கட்டடத்தால் கட்டப்பட்டு உள்ளது. கோவில் முன்பு உண்டியல் வெட்ட வெளியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கோவிலுக்கு வந்தனர்.

    இதனையடுத்து கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்ற ஊர் பொதுமக்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த சம்பவம் குறித்து ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் கிளியனூர் ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு வழக்குபதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    • காய்கறி வாங்கி விட்டு வீடு திரும்பியவரிடம் மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
    • மொபட்டில் சென்ற பெண்ணிடமும் 8 பவுன் தங்கச்செயின் கொள்ளை

    கோவை,

    கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சந்திரிகா (வயது 56). இவர் மாலை 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.

    சந்தையில் காய்கறி வாங்கி விட்டு தனது வீடு நோக்கி நடந்து வந்தார். அப்போது வீட்டிற்கு முன்பு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சந்திரிகா அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தினர். சந்திரிகா கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயினை பறித்து சென்றனர்.

    செயின் பறிக் கும்போது கீழே விழுந்த சந்திரிகா சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கணவர் கோபி ஓடி வருவதற்குள் மோட்டார்சைக்கிளில் வந்த திருடர்கள் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு , வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அதே போன்று சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நிர்மலா (வயது 56). இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு தனது மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். பீள மேட்டில் திடீரென மொபட் நிற்கவே, கீழே இறங்கி பெட்ரோல் இருக்கிறதா என சோதித்து பார்த்தார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென நிர்மலா அணிந்திருந்த 8 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்மலா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கண்காணிப்பு காமிரா மூலம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • உடையார்பாளையம் போலீசார் நடவடிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 42). கூலி தொழிலாளி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.இவர் சம்பவத்தன்று ஆடுகளை வயல்காட்டுக்கு ஓட்டிச்சென்று மேய்த்துவிட்டு, வழக்கம்போல் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் கட்டிவிட்டு தூங்கச்சென்றார்.அதிகாலையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த ராணி, உடனடியாக ஆடுகள் கட்டியிருந்த பகுதிக்கு சென்றார்.அப்போது 4 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் ஆட்டை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த ராணி சத்தம் போட்டுள்ளார். சத்தத்தை கேட்ட அவர்கள் அங்கிருந்து ஒரு ஆட்டை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆட்டை திருடியதாக சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (21), வேணாநல்லூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (22) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தார்.

    • மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
    • இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண் மகேஸ்வரன் (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று மாலை கட்டி ட பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 கிலோ இரும்பு கம்பிகள் மற்றும் 2 கட்டிங் மிஷின்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அருண் மகேஸ்வரன் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை-4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் கோமதிபுரம் செவ்வந்தி தெருவை சேர்ந்தவர் மலர்கொடி(வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 14 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகி யவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இந்த நிலையில் ஊர் திரும்பிய மலர்கொடி வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி கைரேகை, தடயங்களை சேகரித்தனர். கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மகாராஜா சம்பவத்தன்று இரவில் மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • அதிலிருந்து ரூ.9 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடியை சேர்ந்தவர் மகாராஜா (வயது 28). மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவில் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் பதற்றத்துடன் மகாராஜா உள்ளே சென்று பார்த்தபோது, பணம் வைக்கும் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்து ரூ.9 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து மகாராஜா ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சின்னையா கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • குடியிருப்பு வாசிகள் டார்ச் லைட்டை வீடுகளில் அடித்து உஷாராகினர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சிகுட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதியில் உள்ளது சின்னையா கார்டன் இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர்.

    காலியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்து எதுவும் கிடைக்காமல், அடுத்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதி வாசி ஒருவர் அவர்களை பார்த்து விட்டார். இதையடுத்து குடியிருப்பு வாசிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனால் உஷாரான குடியிருப்பு வாசிகள் வீடுகளில் விளக்கை எரியவிட்டும், டார்ச் லைட்டை வீடுகளில் அடித்தும் உஷாராகினர். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு இருப்பதை கண்டு திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பொதுமக்களிடம் மாட்டினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்த திருடர்கள் அங்குள்ள வீட்டில் காய போட்டு இருந்த துணிகளை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு, இருட்டுப் பகுதியில் குதித்து தப்பி ஓடினர். அதன் அருகே உள்ள டி.எம்.எஸ். கார்டன் பகுதியில் திருடலாம் என்று சென்றபோது, திருடர்கள் குறித்த தகவல் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணிக்கு வந்து விட்டனர். போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருடர்கள் வீட்டினுள் புகுவது, துணிகளை முகத்தில் கட்டி கொள்வது போன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின.
    • விவசாயி திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில், விவசாயி ஒருவர் கால்நடை மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்மநபர்கள், அவரது தோட்டத்தில் கோழிகளை திருட முயன்றுள்ளனர். கோழிகள் மற்றும் கால்நடைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி, இவர்களைப் பார்த்து திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அரிவாளை காட்டி அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லாவகமாக அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த காளிதாஸ், பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மடக்கி பிடித்ததால் மோட்டார் சைக்கிளை விட்டு சென்றனர்.
    • வேலையை முடித்து காந்திபுரம் 7-வது வீதியில் நடந்து வந்தார்.

    கோவை,

    கோவை உக்கடம் புல்லுகாடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கபீர் (வயது36). வீடியோ–கிராபர். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்து காந்திபுரம் 7-வது வீதியில் நடந்து வந்தார்.

    அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கபீர் அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கபீர் சத்தம் போட்டார்.

    அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு கபீரின் செல்போனுடன் தப்பி சென்றனர்.

    கபீர் செல்போன் திருடர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்து வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்களது செல்போன் எண்ணுக்கு அழைத்தார். அழைப்பை எடுத்த திருடர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை காந்திபுரம் பஸ் நிலையம் வந்து கொடுத்துவிட்டு செல்போனை பெற்று கொள்ள கூறினர்.

    கபீர் மோட்டார் சைக்கிளை எடுத்து காந்திபுரம் சென்று திருடர்களை தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் அங்கு வரவில்லை. இதையடுத்து கபீர் மோட்டார் சைக்கிளை காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்து நடந்தவற்றை கூறி புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற அந்த மர்ம நபர்கள் யார் என அந்த மோட்டார் சைக்கிளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருமங்கலம் அருகே தோட்டத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • முகவரி கேட்பது போல் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வம். இவர் பால்பண்ணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உசிலம்பட்டி பிரதான சாலையில் இருக்கிறது.

    நேற்று மாலை அந்த தோட்டத்தில் தங்களது மாடுகளை தெய்வத்தின் மனைவி செல்வராணி (வயது 52) கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஒரு முகவரியை கூறி, அதற்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்டனர்.

    அவர்களுக்கு செல்வராணி பதில் கூறிக்கொண்டிருந்த போது, அந்த நபர்கள் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து சித்தப்பட்டி போலீஸ் நிலையத்தில் செல்வராணி புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்துச்சென்ற 3 வாலிபர்களை தேடி வருகின்றனர். நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டுபிடிக்க அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர்.
    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரோடுபரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஷம்சுதீன்(வயது30). இவர் வடசேமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செல்போனில் அழைப்பு வந்ததால், மேலேரி தனியார் கல்லூரி அருகில் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு ஷம்சுதீன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். 

    அப்போது சங்கரா புரத்தில் இருந்து கள்ளக்கு றிச்சி நோக்கி இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர். ஆனால் அவரோ தர மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஷம்சுதீனின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் கிழித்து விட்டு அவரிடம் இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    படுகாயம் அடைந்த சம்சுதீனை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து செல்போன்களை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.  மேலும் சங்கராபுரம் சீர்பாத நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்(62). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் முனியம்மாளிடம் பேச்சு கொடுத்து அவரது கழுத்தில் கிடந்த ரூ.60 ஆயிரம் மதிப்புடைய 3 பவுன் சங்கிலியை பறித்து க்கொண்டு, தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்து றைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவுசெய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×