search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழி"

    • வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    ஊட்டி:

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தின் எல்லை மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்ட எல்லையிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள பிறப்பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிர கண்காணிப்பு செய்ய கக்கனல்லா, நம்பியார் குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்ட வயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடியில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளைத் தாக்கும், மனிதரையும் தாக்கவல்லது. நோய்தாக்கிய வெளிநாடுகளில் இருந்து வரும் வனப்பறவைகள் மூலம் இந்நோய் நமது மாவட்டத்திலும் நுழைய வாய்ப்பு உள்ளது.

    பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பண்ணையாளர்கள் தவறாது கடை பிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி, முதலிய பல்வேறு இனப்பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக்கூ டாது. இதரப் பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, அனைத்து உள் உறுப்புகள் மற்றும் கால்களின் மீது இரத்துக்கசிவு காணப்படும். பறவைக்காய்ச்சல் நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற மற்றும் இறந்த கோழிகளை கையாளுவோருக்கு இந்நோய் சுவாசக் காற்று மூலம் பரவக் கூடும். காய்ச்சல், தொண்டைப்புண், இருமல் ஆகியவை மனிதரில் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

    நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டை உண்பதால் இந்நோய் பரவாது. பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.

    மேலும், தற்காலிகமாக கேரளா மாநில பிற பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றிவருவது மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தீயணைக்கும் படை வீரர்கள் மீட்டனர்

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறை சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது60). இவரது வீட்டில் மலை பாம்பு ஒன்று கோழி கூட்டினுள் புகுந்து கோழியை விழுங்கி கொண்டு வெளியே செல்ல முடியாமல் கோழிக்கூட்டினுள் பதுங்கி இருந்தது. இது குறித்து ராஜன் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் தீயணைக்கும் படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று அந்த ராட்சத மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த ராட்சத மலைப்பாம்பு 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த மலைப்பாம்பை தீயணைக்கும் படை வீரர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பான அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    • முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது.
    • முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.

    சாதாரணமாக ஒரு கோழி முட்டையின் எடை 50 கிராம் முதல் 70 கிராம் வரை இருக்கும். ஆனால் கனடா நாட்டில் ஒரு கோழி 202 கிராம் எடையில் முட்டையிட்டுள்ளது. அங்குள்ள மணிடோபா பகுதியை சேர்ந்த ஆஷாபார்டெல் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 2 வயது நிரம்பிய கோழி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிடும் பருவத்தை எட்டிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் ஒரு சத்தம் கேட்டுள்ளது. உடனே ஆஷா அங்கு சென்ற போது தரையில் ராட்சத முட்டை ஒன்று கிடந்தது. அதை பார்த்ததும் ஆஷா ஆச்சரியம் அடைந்தார்.

    ஏனென்றால் அந்த முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது. இந்த முட்டை சிறிய மாம்பழம் அளவில் இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என ஆஷா கூறினார். இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். அதே நேரம் உலகிலேயே அதிக எடை கொண்ட கோழி முட்டை என கின்னஸ் சாதனை படைத்த முட்டை என்றால் அது 1956-ம் ஆண்டு நியூஜெர்சியில் ஒரு கோழியால் இடப்பட்ட 454 கிராம் எடை கொண்ட கோழி முட்டை ஆகும்.

    • கோழி- பருந்து இடையே நடக்கும் சண்டையை மேற்கொள்காட்டி ருசிகரமாக விளக்கம் அளித்தார்.
    • கோழி வன்முறை செய்வதாக சமூகம் சொல்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாட்டில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் அதை தவறுதலாக சித்தரித்து தங்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

    இதை கோழி- பருந்து இடையே நடக்கும் சண்டையை மேற்கொள்காட்டி ருசிகரமாக விளக்கம் அளித்தார்.

    தனது குஞ்சுகளை பாதுகாக்க தாய்க்கோழி பருந்துடன் சண்டை போடுகிறது. குஞ்சை தூக்கி செல்வதற்காக பருந்து தாய் கோழியுடன் சண்டை போடுகிறது. இதில் வன்முறை செய்வது கோழியா? பருந்தா? பருந்துதானே!

    ஆனால் கோழி வன்முறை செய்வதாக சமூகம் சொல்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது.

    • விடை காண முயன்று வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
    • 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது.

    உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா...

    சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது.

    சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய கேள்விகளில் ஒன்றுதான் இது.

    பல ஆண்டுகளாக மக்களிடையே ஏற்பட்டு வரும் குழப்பனா கேள்வி. நம்மில் பலருக்கு மணிக்கணக்கில் விவாதம் செய்தும் பதில் கிடைக்கவில்லை. எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா என்ற இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் எனக்கு தெரியாது என்னும் வகையில் ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள்.

    நமக்கே இந்த குழப்பம் நீடித்து வந்த நிலையில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகளுக்கு இந்த குழப்பம் இருக்காதா என்ன?

    தற்போது அதற்கு விடை காண முயன்று வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

    ஏற்கனவே லண்டனின் ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை ஆழமாக ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் படி உலகில் முதலில் வந்தது முட்டை அல்ல கோழிதான் என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கேள்விக்கான காரணத்தை அவர்கள் கூறியுள்ளனர்.

    விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், ஓவோக்லிடின் என்ற புரதம் கோழி முட்டையின் ஓட்டில் காணப்படுகிறது. இந்த புரதம் இல்லாமல் முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாது. இது மட்டுமின்றி, கோழியின் கருப்பையில் மட்டுமே இந்த புரதம் உற்பத்தியாகிறது.

    இந்த வகையில் கோழிதான் உலகிலேயே முதலில் வந்திருக்கும். ஓவோக்லிடின் கோழியின் கருப்பையில் தயாரிக்கப்படும் ஒரு புரதம். பின்னர் இந்த புரதம் முட்டையின் ஓட்டை அடைகிறது என கூறியுள்ளனர்.

    விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் உலகில் முட்டைக்கு முன் கோழி வந்தது என்று தெரிய வந்தது.

    செல்லின் மூலக்கூறு அமைப்பைப் பார்க்க, ஹெக்டோஆர் எனப்படும் ஹைடெக் கணினியை விஞ்ஞானிகள் குழு பயன்படுத்தியது. கோழியின் உடலில் உள்ள கால்சியம் கார்பனேட்டை கால்சைட் படிகங்களாக மாற்றுவதைத் தொடங்கி, ஓ.சி.-17 ஒரு வினையூக்கியாக செயல்படுவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இவைதான் குஞ்சு வளரும் போது மஞ்சள் கரு மற்றும் அதன் பாதுகாப்பு திரவங்களை வைத்திருக்கும் கடினமான செல் ஆகும்.

    இந்த சூழ்நிலையில் தற்போது லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகளாக நம்மைத் குழப்பிய இந்தக் கேள்விக்கான விடை கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த முடிவு 51 புதைபடிவ இனங்கள் மற்றும் 29 உயிரினங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது, அவை முட்டையிடும் உயிரினங்கள் அல்லது விவிபாரஸ் (குட்டி போடும் உயிரினங்கள்) என வகைப்படுத்தலாம். முட்டையிடும் உயிரினங்கள் கடினமான அல்லது மென்மையான ஓடுகள் கொண்ட முட்டைகளை இடுவதற்குப் பெயர் பெற்றவை என்றாலும், விவிபாரஸ் இனங்கள் குட்டிகளாகவே பிறக்கின்றன.

    இது இரண்டும் சேர்ந்த கலவைப்போல, அம்னியோட்கள் எனும் முட்டை இடகூடிய முதுகெலும்பு கொண்ட உயிரிங்கள் உயிர்வாழ்வதற்கு கடினமான ஓடுகள் கொண்ட முட்டைகள் முக்கியமானவை என்று தற்போதுள்ள கண்டுபிடிப்பை கேள்விக் குள்ளாக்குகிறது. பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி, இப்போது இருக்கும் ஊர்வன, பரப்பன மற்றும் பாலூட்டிகளின் ஆரம்பகால மூதாதையர்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக குட்டிகளைப் பெற்றெடுத்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எர்த் சயின்சஸ் பேராசிரியர் மைக்கில் பெண்டன் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியானது, 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது. ஆய்வின்படி, பாலூட்டிகள், லெபிடோசவுரியா (பல்லிகள் மற்றும் பிற ஊர்வன) மற்றும் ஆர்க்கோசௌரியா (டைனோசர்கள், முதலைகள், பறவைகள்) உட்பட அம்னியோட்டாவின் அனைத்து வகுப்புகளும் விவிபாரஸ் மற்றும் அவற்றின் உடலில் கருவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. கடின ஓடு கொண்ட முட்டையானது பெரும்பாலும் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான படியாகும் மற்றும் இறுதியில் கருவைப் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

    குட்டிகளை ஈன்று கொண்டிருந்த சில விலங்குகள் பரிணாம வளர்ச்சியில், முட்டைகளை போடும் உயிரினங்களாக பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. எனவே, முதலில் கோழி வரவில்லை, முட்டை தான் வந்துள்ளது.

    முதலில் குட்டிகளை போட்டுக்கொண்டிருந்த கோழியின் மூதாதைய உயிரினம் பரிணாம வளர்ச்சியில் முட்டை போடும் கோழைகளாக மாறின. அவை இப்போது முட்டை போட்டு குஞ்சு பொரிக்கின்றன. முதலில் மென்மையாக இருந்த முட்டை ஓடுகள் பரிணாம வளர்ச்சியில் கடினமான ஓடுகளாக மாறியுள்ளன என்கின்றனர் விஞ்ஞானிகள்...அது சரி...முட்டைதான் முதலில் வந்தது என நிரூபணமாகிவிட்டது...கோழி உலகில் உருவானது எப்படி? ....சினிமாப்பட 2-ம் பாகம் போல அடுத்த விவாதத்துக்கு தயாராவோமா....

    • மதுரையில் கோழி வியாபாரியை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பழனிச்சாமி மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    மதிச்சியம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 44), கோழி கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் வைகை வடகரை, ஆசாரி தோப்பு பகுதியில் நடந்து சென்றார்.

    அங்கு குடிபோதையில் இருந்த 5 பேர் தகராறில் ஈடுபட்டனர். எனவே பழனிச்சாமி, "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த 5 பேரும் கோழி வியாபாரியை தாக்கினர்.

    இதுகுறித்து பழனிச்சாமி மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோழி வியாபாரியை தாக்கிய ஆசாரி தோப்பு ரவிச்சந்திரன் மகன் கபடி சூர்யா (24), முருகன், மானகிரி செல்லத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மகன் மாரிமுத்து என்ற ஆட்டு மாரி (24), உஸ்மான் காலனி ஆறுமுகம் மகன வெங்கடராஜேஷ் (23), அபீஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    ஆழ்வார் புரத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (26). கூலித்தொழிலாளி. இவரும் கீரைத்துறை, ராணி பொன்னம்மாள் ரோட்டை சேர்ந்த ராமர் (56) என்பவரும் ஒரே நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று நள்ளிரவு இருவரும் குடிபோதையில் தெற்கு மாரட் வீதி பாண்டிய வேளாளர் தெரு சந்திப்பில் நடந்து வந்தனர். அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமர், ஆசைத்தம்பியை கத்தியால் குத்தி விட்டு தப்பினார்.

    இது குறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்தனர்.

    ×