search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே கோழி கழிவுகளை சானலில் கொட்டிய டெம்போ டிரைவர்
    X

    கோழி கழிவு கொட்டிய மினி டெம்போ 

    குலசேகரம் அருகே கோழி கழிவுகளை சானலில் கொட்டிய டெம்போ டிரைவர்

    • பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மங்கலம் சந்திப்பு பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் அரசு பள்ளிகூடம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    எப்போதும் பரப்பரப் பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டணம் பேச்சிப்பாறை பட்டணம் கால்வாய் பாய்கிறது. இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் சானல் கரை யோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது.

    இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்த னர். போலீசார் வந்து பார்வை யிட்டு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வந்தார்கள். நேற்று வழக்கம்போல் இரவில் அந்த பகுதியில் மினி டெம்போவில் ஒரு பேரல் நிறைய கோழி கழிவு களை கொண்டுவந்து சாலை யோரம் கொட்டிவிட்டு பேரல்நிறைய சானலில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்கள்.

    இதுபற்றிய தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பொன்மனை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து மினி டெம்போவை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.

    இது பற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×