என் மலர்
நீங்கள் தேடியது "கறிக்கோழி"
- பண்ணையாளர்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை.
- திருப்பூரில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் கறிக்கோழி பண்ணையாளர்கள் அல்ல.
கறிக்கோழி விலை உயர்வு போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும் என கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறியதாவது:-
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்னையை தேவையற்ற விதத்தில் பெரிதாக்கி வருகின்றனர்.
உண்மையில், 90 சதவீத கறிக்கோழி பண்ணையாளர்கள் கிலோவுக்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனர். கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்கப்படுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது.
வெறும் 5 சதவீத பண்ணையாளர்களே அந்த அளவிற்கு பெறுகின்றனர்.
தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே சராசரியாக அதிக தொகை கறிக்கோழி வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது உற்பத்தி 90 சதவீதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இயல்பாக ஏற்ற இறக்கங்களைக் கொண்ட ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாக உள்ளது. பண்ணையாளர்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை.
நாள்தோறும் 23 லட்சம் முதல் 25 லட்சம் வரை கறிக்கோழிகள் வழக்கம் போல் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு வருகின்றன. 'விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்' என்ற பெயரில் தான் இந்த பிரச்னை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படுகிறது. இதற்கு விரைவில் முடிவு காண வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்ட ஆலோசனைப்படி அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இது அரசு கொள்முதல் செய்யும் தொழில் அல்ல. ஒப்பந்த நிறுவனங்களுக்கும்ம் பண்ணையாளர்களுக்கும் இடையிலான வர்த்தகமாகவே இது நடைபெறுகிறது. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே அரசு தலையிட முடியும்.
பண்ணையாளர்கள் தாங்களே சொந்தமாக கோழிகளை வளர்க்கிறோம் என கூறுகின்றனர். தற்போது கோழிக் குஞ்சுகளின் விலை ரூ.60-ஐ எட்டியுள்ள நிலையில், பலர் இந்தத் தொழிலில் புதிதாக ஈடுபட்டு வருகின்றனர். எந்த விவசாயியையும் வற்புறுத்தியோ, மிரட்டியோ இந்தத் தொழிலை செய்ய யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

மேலும், தென்னை நார் மஞ்சி விலையை குறைக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை சலுகை விலையில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை பணியாளர்களும் ஒப்பந்த நிறுவனங்களும் இணைந்து முன்வைக்க வேண்டும்.
பண்ணைகளில் கோழிகளுக்கு தீவனம் அல்லது தண்ணீர் வைக்க வேண்டாம் என தவறான தகவல்களை பரப்பக் கூடாது. திருப்பூரில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் கறிக்கோழி பண்ணையாளர்கள் அல்ல.
டிசம்பர் மாதமே வளர்ப்பு தொகையை ரூ.1 உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. கோடை காலத்தில் கூடுதலாக கிலோவுக்கு ரூ.1 வழங்கவும், விற்பனை விலை உயரும்போதும் அதேபோல் கிலோவுக்கு ரூ.1 அதிகரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 3 லட்சம் கோழிக் குஞ்சுகள் இறந்ததாக தகவல் உள்ளது.
கோழிக் குஞ்சுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போதைய கறிக்கோழி விலை உயர்வு இந்த போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல; இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும்.
சந்தை விலைகளில் முழுமையான கட்டுப்பாடு விதிக்க இயலாது. தமிழ்நாடு அதிக நுகர்வோர்களைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.
தற்போதைய விலை உயர்வு படிப்படியாக குறையும். மேலும் தற்போது விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்பவர் மூலம் ரூ.20 வழங்க வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு வாய்ப்பே இல்லை தெரிவித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.
உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா? உழவர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று பாமக தலைவர் அன்புமணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அறவழியில் போராடிய கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 10 நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. உரிமைக்காக போராடிய விவசாயிகளை திமுக அரசு சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
கறிக்கோழி வளர்ப்பை பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தாலும், அவர்களுக்காக கறிக்கோழிகளை வளர்த்து தருபவர்கள் உழவர்கள் தான். இதற்காக அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஊதியம் உயர்த்தப்படாத நிலையில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை மறுநாள் 21-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்பாகவே கறிக்கோழி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கவே, கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.
உழவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பெரு நிறுவனங்களின் கையாளாக மாறி அவர்களை ஒடுக்கி வருகிறது. மேல்மா பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த திமுக அரசிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகளால் உழவர்களின் முதல் எதிரியாக திமுக அரசு உருவெடுத்திருக்கிறது.
கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோரை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 கூலி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.
- தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
'கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்யும் விடியா திமுக அரசுக்கு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.
தற்போது இந்நிறுவனங்கள் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசா வளர்ப்பு கூலியாக கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
தேங்காய் நார்மஞ்சி விலை உயர்வு மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, ஆள் கூலி உயர்வு என பல்வேறு செலவுகள் அதிகரித்ததற்கு ஏற்ப நிறுவனங்கள் கூலி உயர்வு வழங்காததால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ. 20-ஐ அடிப்படை கூலியாக வழங்க வேண்டும்; மின் கட்டண சலுகை, தரமான தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 2
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முன்னெடுப்பில், தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நிறுவனங்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 7.1.2026 அன்று சென்னை கால்நடை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்தி வந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளையும், தமிழக விவசாய பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 10 பேரை 14.1.2026 அன்று விடியா திமுக அரசின் காவல்துறை கைது செய்து, சிறையில் வைத்துள்ளதாக வந்த செய்தி கடும் கண்டனத்திற்குரியது.
கைது செய்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துவதுடன், கறிக்கோழி பண்ணை விவசாய சங்கத்தினரையும், நிறுவனங்களையும் உடனடியாக அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி.
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
- நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ஒரு கிலோவுக்கு மேலும் ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். இதனால் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 14-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் படிப்படியாக ரூ.10 உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை சீசன் தொடங்கி இருப்பதால் கறிக்கோழி உற்பத்தியை 20% குறைத்துள்ளது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
முட்டை கொள்முதல் விலை 535 காசுகள் ஆகும். முட்டை கோழி விலை கிலோ ரூ.102 ஆகவும் நீடிக்கிறது. அதன் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
- கறிக்கோழி விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
- முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கறிக்கோழி கிலோ ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் கறிக்கோழி விலையை மேலும் ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கறிக்கோழி விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டை கோழி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
- நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
- 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் , பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று
பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது .
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. அப்போது கறிக்கோழியின் உற்பத்தி மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .அதன்படி கறிக்கோழி விலை இன்று 91 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
- பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.124 இருந்தது தற்போது கிலோ 80 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது.
பல்லடம் :
பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம், தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், மற்றும்கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்நிலையில் கறிக்கோழி விற்பனை நுகர்வு குறைவால், விற்பனையில் மந்தம் ஏற்பட்டு கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மாதத்தில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.124 இருந்தது தற்போது கிலோ 80 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது. இதனால் கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-
கடந்த புரட்டாசி மாதத்தால் கறிக்கோழி நுகர்வு குறைந்து கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டது. பின்னர் சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகைகளால் கறிக்கோழி விற்பனை சரிவு ஏற்பட்டது. வழக்கமாக பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை, இன்னும் விற்பனை அதிகரிக்கவில்லை. இதனால் கொள்முதல் விலையும் உயரவில்லை. இந்த நிலையில் தற்போது கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ. 90 வரை செலவாகும் நிலையில் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் வாரங்களில் திருமணம், போன்ற விழாக்கள் உள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வெள்ளிச்சந்தையில் ஓட்டல் மற்றும் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார்
- 2 பேர் முன் விரோதம் காரணமாக அனித்தை வழிமறித்து தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
கன்னியாகுமரி :
வெள்ளிச்சந்தை அருகே சூரப்பள்ளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அனித் (வயது24). இவர் வெள்ளிச்சந்தையில் ஓட்டல் மற்றும் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அனித் உறவினரை பார்ப்பதற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அம்மாண்டிவிளை தேரி காடு சாலையில் செல்லும்போது அங்கு வந்த கண்டன்விளையை சேர்ந்த சுபின், மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தை சேர்ந்த அய்யப்பன், திருநயினார்குறிச்சியை சேர்ந்த ராஜன் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் முன் விரோதம் காரணமாக அனித்தை வழிமறித்து புல் வெட்டியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இதில் படுகாயமடைந்த அனித் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்ச ம்பவம் குறித்து மணவா ளக்குறிச்சி போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது.
- கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கறிக்கோழி விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கிடையே கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கறிக்கோழி விலை 84 ரூபாயில் இருந்து 89 ருபாயாக உயர்ந்தது.
இதற்கிடையே நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 72 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 440 காசுகளாகவும் நீடிக்கிறது.
- பி.சி.சி. நிர்ணயம் செய்யும் முறையில் இருந்து கிலோவுக்கு 30 ரூபாய் குறைத்து பண்ணைகளில் கோழிகளை பிடிக்கின்றனர்.
- கோழி பண்ணை தொழிலை காப்பாற்ற தமிழக அரசு நிர்ணயம் செய்து தர வேண்டும்.
நாமக்கல்:
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்பட பல பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை என்பது தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்பட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
அதன்படி கடந்த 1-ந் தேதி கொள்முதல் விலை ஒரு கிலோ 92 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. 5-ந் தேதி 84 ரூபாய், 20-ந் தேதி 89 ரூபாய் என ஏற்றம் இறக்கம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று கறிக்கொழி விலை 12 ரூபாய் சரிந்து 77 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஒரே நாளில் 12 ரூபாய் விலை குறைந்தது பண்ணையாளர்கள் மத்தியில் கவலை அடைய செய்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
பி.சி.சி. நிர்ணயம் செய்யும் முறையில் இருந்து கிலோவுக்கு 30 ரூபாய் குறைத்து பண்ணைகளில் கோழிகளை பிடிக்கின்றனர். இதனால் தினமும் ரூ.11 கோடி வீதம் வாரம் ரூ.27 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஒரு கிலோ கோழி உற்பத்தி செய்வதற்கு 90 முதல் 100 ரூபாய் செலவாகிறது.
உற்பத்தி செலவுடன் குறைத்து விற்பனை செய்வதால் பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கொள்முதல் விலையில் இருந்து சராசரியாக 10 ரூபாய் குறைத்தே கோழிகளை வாங்குகின்றனர்.
இந்த மாதம் மட்டும் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோழி பண்ணை தொழிலை காப்பாற்ற தமிழக அரசு நிர்ணயம் செய்து தர வேண்டும். பண்ணியாளர்களை அழைத்து பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி வளர்ப்போர் கூட்டத்தில் முட்டைகோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 67 ரூபாயாக நீடிக்கும் என அறிவிப்பு.
- முட்டை விலை 440 காசுகளாக நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 30 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்ககப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 7 ரூபாய் உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி 75 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 82 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி வளர்ப்போர் கூட்டத்தில் முட்டைகோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 67 ரூபாயாக நீடிக்கும் என்றும், முட்டை விலை 440 காசுகளாகவும் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
- நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்ப டுகின்றன. இந்த கறிக்கோ ழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோ சனை கூட்டம் நேற்று பல்லடத்தில் நடந்தது. கூட்டத்தில் கறிக்கோழி தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் ரூ.120 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.122 ஆக உயர்ந்தது. கடந்த 16-ந் தேதி ரூ.116 ஆக இருந்த கறிக்கோழி விலை, 17-ந் தேதி ரூ.120 ஆக உயர்ந்த நிலையில், நேற்று மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்ட தால் கறிக்கோழி விலை 3 நாளில் ரூ.6 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடும் வெயிலால் கறிக்கோழியின் எடை குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்து உள்ளதா லும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரி வித்துள்ளனர். இதேபோல முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. முட்டை கோழி விலை எந்த மாற்றமும் செய்யாமல் 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.






