நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் 5 ரூபாய் உயர்வு

கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் 5 ரூபாய் உயர்வு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கறிக்கோழி விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கிடையே கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கறிக்கோழி விலை 84 ரூபாயில் இருந்து 89 ருபாயாக உயர்ந்தது.

இதற்கிடையே நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 72 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 440 காசுகளாகவும் நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com