என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய பண்ணை"

    • கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.
    • தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

    'கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்யும் விடியா திமுக அரசுக்கு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.

    தற்போது இந்நிறுவனங்கள் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசா வளர்ப்பு கூலியாக கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

    தேங்காய் நார்மஞ்சி விலை உயர்வு மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, ஆள் கூலி உயர்வு என பல்வேறு செலவுகள் அதிகரித்ததற்கு ஏற்ப நிறுவனங்கள் கூலி உயர்வு வழங்காததால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ. 20-ஐ அடிப்படை கூலியாக வழங்க வேண்டும்; மின் கட்டண சலுகை, தரமான தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 2

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முன்னெடுப்பில், தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

    1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நிறுவனங்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து, 7.1.2026 அன்று சென்னை கால்நடை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்தி வந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளையும், தமிழக விவசாய பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 10 பேரை 14.1.2026 அன்று விடியா திமுக அரசின் காவல்துறை கைது செய்து, சிறையில் வைத்துள்ளதாக வந்த செய்தி கடும் கண்டனத்திற்குரியது.

    கைது செய்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துவதுடன், கறிக்கோழி பண்ணை விவசாய சங்கத்தினரையும், நிறுவனங்களையும் உடனடியாக அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி.

    கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

    • ராஜபாளையம் அருகே கூட்டுறவு விவசாய பண்ணை சங்கம் சார்பில் சிமெண்டு களம்-குடோன் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கூட்டுறவு விவசாய குத்தகைதாரர் பண்ணை சங்கம் சார்பில் சிமெண்ட் களம் மற்றும் குடோன் திறப்பு விழா நடந்தது.

    பெருந்தலைவர் காமராஜர் நினைவு நெல் களஞ்சியம் என்ற பெயரில் சிமெண்டு களத்தை தனுஷ் குமார் எம்.பி. தலைமையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கல்வெட்டை ராஜபாளையம் யூனியன் தலைவர் சிங்கராஜ் திறந்து வைத்தார்.

    கூட்டுறவு விவசாய பண்ணை சங்க தலைவர் மிசாநடராஜன் வரவேற்றார். பெரியகுளம் கண்மாய் தலைவர் கலைச்செல்வன், வாண்டையார்குளம் கண்மாய் தலைவர் கண்ணன் உள்பட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், தேவதானத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள் முதல் நிலையத்தை இந்த சிமெண்டு களத்திற்கு மாற்றுவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார். கூட்டுறவு சங்க துணை தலைவர் காசி நன்றி கூறினார்.

    இயற்கை ஆர்வலர் தலைமலை, சேகர், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மாசானக் காளை, கிருஷ்ணாபுரம் கவுன்சிலர் காமராஜ், நக்கனேரி கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×