search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "broiler chicken"

    • ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
    • இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    பிராய்லர் கோழி அதிகமாக சாப்பிடுவதால் ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். வறுத்த கோழிகளை சாப்பிடும் போது உடலுக்கும் கெடுதல்களை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.

    பிராய்லர் கோழிகள் விரைவில் வளர்ச்சி அடைய அதற்கு தீவனமாக ஹார்மோன்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் நிறைந்த பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடும் போது உடல் எடை அதிகரித்து உடல்நல பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறது.

    பிராய்லர் கோழியில் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடலில் கொழுப்புகள் அதிகரித்து இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    பிராய்லர் கோழியில் உள்ள ரசாயனம் ஆண்களின் விந்தணுவை குறைத்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் பிராய்லர் கோழியை தவிர்ப்பது நல்லது. பெண்களும் பிராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தான் பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். பிராய்லர் கோழியை வறுத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் அதிக எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடலாம்.

    குறைந்த பட்சம் 165 வெப்பநிலையில் இறைச்சியை சமைக்க வேண்டும். மேலும் பிராய்லர் கோழியில் சமைத்த உணவை மறுநாள் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து மீண்டும் விலை உயரத் தொடங்கும்.
    • கார்த்திகை மாதத்தில் வியாபாரம் மந்தமாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாக சூடுபிடிக்கும் என்று கோழி இறைச்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    சென்னையில் கோழிக்கறி விலை தீபாவளி வரை உச்சத்திற்கு சென்றது. கிலோ ரூ.240 முதல் ரூ.260 வரை விற்கப்பட்டது. மட்டன் கிலோ ரூ.1000 வரை உயர்ந்தது.

    ஆனால் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து இறைச்சி விலை குறையத் தொடங்கின. இந்த மாதத்தில் சிலர் விரதம் இருப்பது வழக்கம். மேலும் சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்வதால் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.

    இதனால் மீன், மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சி வகைகள் விற்பனை குறைந்தது. இதனால் கடந்த 2 வாரமாக இறைச்சி கடைகள் வெறிச்சோடியது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவு பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

    பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு கறிக்கோழி, ஆடுகள் போன்றவை கூடுதலாக கொண்டு வருவது வழக்கம். ஆனால் கார்த்திகை மாதத்தில் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்கின்றனர்.

    அசைவ உணவு சாப்பிடக் கூடியவர்கள் கோழிக்கறியை வாங்காததால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது கோழிக்கறி கிலோ ரூ.180ஆக குறைந்தது. கிலோவிற்கு ரூ.60 முதல் 80 வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். டிசம்பர் மாதம் இறுதி வரை விலை குறைவாகத்தான் இருக்கும்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து மீண்டும் விலை உயரத் தொடங்கும். அதே நேரத்தில் தற்போது உணவு ரூ.180-ஐ விட மேலும் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. எப்போதும் கார்த்திகை மாதத்தில் வியாபாரம் மந்தமாக இருக்கும். அதன்பிறகு படிப்படியாக சூடுபிடிக்கும் என்று கோழி இறைச்சி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
    • இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

    திருப்பூர்:

    பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி மற்றும் -பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில், நடந்த இக்கருத்தரங்கில் நாமக்கல் கால்நடை தீவன பகுப்பாய்வகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் பேசியதாவது:-

    பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. கோழிகளின் இறைச்சி மற்றும் எடை அதிகரிப்புக்காக, ஊசி செலுத்துவது குறித்து ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. இதனை மக்கள் நம்ப வேண்டாம்.

    நமது குழந்தைகளுக்கு, அம்மை நோய் மற்றும் போலியோ போன்ற நோய்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்துவது போல், இந்த வகை கோழிகளுக்கும் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.

    நாட்டுக்கோழிகளில் அதிக சத்து இருப்பதாகவும், பிராய்லர் கோழிகளில் சத்து இல்லை என்றும் மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. நாட்டுக்கோழிகள் அதிக நாட்கள் வளரக்கூடியவை. இதனால் இதன் சுவை கூடுதலாக உள்ளது. சத்துக்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது.
    • கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கறிக்கோழி விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கிடையே கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கறிக்கோழி விலை 84 ரூபாயில் இருந்து 89 ருபாயாக உயர்ந்தது.

    இதற்கிடையே நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 72 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 440 காசுகளாகவும் நீடிக்கிறது.

    • முட்டை கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 565 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கறிக்கோழி விலை பல்லடத்தில் தேசிய ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று கறிக்கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.108 ஆக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை, ரூ.102 ரூபாயாக குறைக்கப்பட்டது.

    இதற்கிடையே நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.87 ஆக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதே போல நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 565 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    • கறிக்கோழி விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கறிக்கோழி கிலோ ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை மேலும் ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கறிக்கோழி விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை கோழி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டத்தில் ஒரு பிராய்லர் கடை செயல்பட்டு வருகிறது. இது காஞ்சிகோவிலை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு சொந்தமானது. இதனை ஜெகதீஸ்வரன் என்பவர் கவனித்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது டியூப்பில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதில் திடீரென தீப்பிடித்து அருகில் இருந்து பொரு ட்கள் எரிய தொடங்கின.

    இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தோடு கியாஸ் கசிவையும் நிறுத்தினர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக கோழிகள், குஞ்சுகள் தப்பின. கடையில இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது. மேற்புர பகுதியில் தகர ஷீட் அமைத்து இருந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் நல்ல நிலையில் இருந்து ள்ளது. நீண்ட நாட்களாக டியூப்பை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். பழுதான டியூப்பை பயன்படுத்தியதே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

    இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 9-ந் தேதி கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 66 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ. 90 வரை செலவாகும் நிலையில், இந்த கடும் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோடை வெப்பம் காரணமாக கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று கறிக்கோழி விலை 1 கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது.
    சென்னை:

    கோடை வெப்பம் காரணமாக கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று கறிக்கோழி விலை 1 கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. கடந்த மாதம் கறிக்கோழி கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்டது.

    கடந்தவாரம் ரூ.160 முதல் ரூ.190 வரை விற்கப்பட்டது. நேற்று திடீரென்று ரூ.240 ஆக உயர்ந்தது. அதாவது ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் நேற்று கறிக்கோழி வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கறிக்கோழி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போது 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் மீன்வரத்து குறைந்துவிட்டது. இதனால் பெரும்பாலானவர்கள் கறிக்கோழி வாங்க தொடங்கிவிட்டனர். எனவே கறிக்கோழி விலை உயர்ந்து விட்டதாக கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது கோடைவெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. இதனால் கோழிப் பண்ணைகளில் கோழி உற்பத்தி குறைந்துவிட்டது. வெப்பம் தாங்க முடியாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் இறப்பும் அதிகரித்து வருகிறது. எனவே கோழிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே கறிக்கோழி விலை அதிகரித்து விட்டதாக நாமக்கல்லை சேர்ந்த கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் கோடை அல்லாத காலங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் விரைவில் எடைகூடும். வெயில் காலங்களில் கோழிகள் எடை அதிகரிப்பது தாமதமாகும். இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக கோழிப்பண்ணைகளில் கடந்த 2 வாரத்தில் கிலோவுக்கு விலை ரூ.16 முதல் ரூ.19 வரை அதிகரித்திருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்காக செல்லும் கறிக்கோழிகளுக்கு பிராய்லர் ஒருங்கிணைப்பு கமிட்டி தான் விலையை நிர்ணயிக்கிறது. கோழிகள் உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. கோடைகாலம் முடிந்தபிறகு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கறிக்கோழி விலை ரூ.50 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னையை பொறுத்த வரை தற்போது கறிக்கோழி கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது. எலும்பு இல்லாத கறிக்கோழி கிலோ ரூ.340 முதல் ரூ.360 வரை விற்கப்படுகிறது. கோழிப்பண்ணைகளில் மே-1-ந்தேதி கறிக்கோழி கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ.109-க்கு விற்கப்பட்டது.

    மீன்பிடி தடைகாலம் காரணமாக காசிமேட்டில் சங்கரா மற்றும் கொடுவா மீன் 1 கிலோ ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. வஞ்சிரமீன் ரூ.750 ஆக உயர்ந்துள்ளது.#tamilnews
    ×