கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி - பண்ணையாளர்கள் கவலை

தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது.
கறிக்கோழி பண்ணை
கறிக்கோழி பண்ணை
Published on

பல்லடம் :

பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 9-ந் தேதி கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 66 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ. 90 வரை செலவாகும் நிலையில், இந்த கடும் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com