search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிராய்லர் கோழி கடையில் தீ விபத்து
    X

    பிராய்லர் கோழி கடையில் தீ விபத்து

    • சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டத்தில் ஒரு பிராய்லர் கடை செயல்பட்டு வருகிறது. இது காஞ்சிகோவிலை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு சொந்தமானது. இதனை ஜெகதீஸ்வரன் என்பவர் கவனித்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது டியூப்பில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதில் திடீரென தீப்பிடித்து அருகில் இருந்து பொரு ட்கள் எரிய தொடங்கின.

    இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தோடு கியாஸ் கசிவையும் நிறுத்தினர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக கோழிகள், குஞ்சுகள் தப்பின. கடையில இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது. மேற்புர பகுதியில் தகர ஷீட் அமைத்து இருந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் நல்ல நிலையில் இருந்து ள்ளது. நீண்ட நாட்களாக டியூப்பை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். பழுதான டியூப்பை பயன்படுத்தியதே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

    இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×