search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
    X

    கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

    • விருதுநகர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது.
    • இதில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசிப் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாதத்தில் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.

    எனவே கோழிப்பண்ணையாளர்கள் 8 வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்தி வந்தால் நோயை முற்றிலும் அகற்றி விடலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் துறை சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி நடைபெறுகிறது. தகுந்த முன்னறிவிப்போடு ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு இந்த முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு இலவச வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×