என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
கோழி திருடர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்
- கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின.
- விவசாயி திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில், விவசாயி ஒருவர் கால்நடை மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்மநபர்கள், அவரது தோட்டத்தில் கோழிகளை திருட முயன்றுள்ளனர். கோழிகள் மற்றும் கால்நடைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி, இவர்களைப் பார்த்து திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அரிவாளை காட்டி அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லாவகமாக அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த காளிதாஸ், பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






