என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crowd"

    • கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டநெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    • ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
    • கூட்டநெரிசலில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்வத்தை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இவ்வாறு உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்து முயன்றதால் பலர் கீழே விழுந்து மிதிபட்டு காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ரெயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர் சிகிச்சைக்காக பர்தாமன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பண்டிகை கால கூட்டம் காரணமாக ரெயில் நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    • ரெயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பெட்டிக்குள் மளமளவென ஏறிய பயணிகள்.
    • மூச்சுவிடக் கூட இடமில்லாத அளவிற்கு பயணிகள் ஏறியதால் மூச்சுத் திணறல்.

    பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் திடீரென கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. முன்பதிவு செய்யப்படாத 2ஆவது வகுப்பு பெட்டியில் இளம்பெண் ஒருவர் எப்படியோ ஏறிவிட்டார். அவரைத் தொடர்ந்து ஜன்னல் வழியாக மளமளவென கூட்டம் ரெயில் பெட்டிக்குள் ஏறியது. 10 பேர் நிற்கக்கூடிய இடத்தில் 20 முதல் 30க்கும் மேற்பட்டோர் முண்டியடித்து ஏறினர். இதனால் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த இளம்பெண், காற்றுக்காக ஏங்கினாள். இதனால் ஜன்னல் கண்ணாடியை திறக்க முயன்றார். ஆனால் மறுமுனையில் இருந்து கூட்டம் கண்ணாடியை மூடிக்கொண்டு மறுவழியாக ஏறத்தொடங்கியது. இறுதியாக எப்படியோ கண்ணாடியை திறக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பாடா, உயிர் பிழைத்தோம் என காற்றை சற்று சுவாசித்தார். பின்னர் பாட்டிலில் உள்ள தண்ணீர் மூலம் முகம் கழுவினார்.

    இதனைத் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பயணிகள் அந்த பெண்ணிற்கு உதவ முன்வரவில்லை. அதற்குப் பதிலாக கேலி கிண்டல் செய்து, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

    ஒரு பெண் மூச்சு விட முடியாமல் திணறி, சற்று இளைப்பாறியதை கிண்டல் செய்து, போட்டோ எடுத்தது முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

    • இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது.
    • அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை.

    ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவaடுக்கப்பட்டது.

    இந்நிலையி்ல் இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி தான் பொறுப்பு என்று தெளிவுபடுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தில் காவல்துறையினரை ஆதரித்த தீர்ப்பாயம், அவர்களும் மனிதர்கள்தான், கடவுள்களோ மந்திரவாதிகளோ அல்ல என்று கூறியது. அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை என்றும், விரலால் தேய்த்தால் எந்த விருப்பத்தையும் நிறைவேற்ற முடியாது என்றும் கூறியது.

    மூன்று முதல் நான்கு லட்சம் பேர் வருகை தந்ததற்கும், காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதி பெறாததற்கும் ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும். சமூக ஊடகங்களில் பதிவுகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்ததாக தீர்ப்பாயம் கூறியது. 

    மேலும் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு மூத்த ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமாரை இடைநீக்கம் செய்த அரசின் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

    • 3,676 அடி உயரத்தில் ஹரிஹர் கோட்டை அமைந்துள்ளது.
    • 60-70 டிகிரி கோணத்தில் செதுக்கப்பட்ட 200 அடி உயரப் பாறைப் படிக்கட்டுகளுக்காகப் பிரபலமானது.

    இந்தியாவின் ஆபத்தான மலையேற்றத் தளங்களில் ஒன்றாக அறியப்படும் மகாராஷ்டிராவின் ஹரிஹர் கோட்டையில் சமீப காலமாக மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

    3,676 அடி உயரத்தில் ஹரிஹர் கோட்டை அமைந்துள்ளது, 60-70 டிகிரி கோணத்தில் செதுக்கப்பட்ட 200 அடி உயரப் பாறைப் படிக்கட்டுகளுக்காகப் பிரபலமானது. இந்த படிக்கட்டுகள் மிகக் குறுகலாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஏறுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

    ஒரு எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ள வீடியோவில், ஆபத்தான படிக்கட்டுகளில் மக்கள் நெருக்கமாக ஏறுவதும், சில சமயங்களில் விளிம்புகளில் சிறிய இடம்கூட இல்லாமல் நிற்பதும், அமர்வதும் தெரிகிற்து. இது பெரும் விபத்துக்கான வாய்ப்பை சுட்டிக்காட்டுகிறது.

    "மற்றொரு பெரிய சம்பவம் நடக்க காத்திருக்கிறதா? ஹரிஹர் கோட்டை வார இறுதி கூட்ட நெரிசல் ஒரு மரணப் பொறியாகும்! இது தடுக்கப்பட வேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் ஒரு சிறிய கூட்ட நெரிசல் அல்லது யாராவது சமநிலையை இழந்தால், அது ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தும் - நூற்றுக்கணக்கானோர் மரணமடைவார்கள்," என்று அந்த பயனர் எச்சரித்துள்ளார்.

    நாசிக்கில் உள்ள வனத்துறை இந்த கோட்டையை கட்டுப்படுத்தி, வருவோரிடம் கட்டணம் வசூலிக்கிறது. அவர்கள் ஒரு நாளைக்கு 300 பார்வையாளர்கள் வரம்பு நிர்ணயித்திருந்தனர், ஆனால் அது அமல்படுத்தப்படவில்லை.

    பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகச் சம்பவத்திற்குப் பிறகு, இந்த ஹரிஹர் கோட்டை சம்பவம் பாதுகாப்பு கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.   

    • கூட்ட நெரிசலால் அல்ல, நோயால் இறந்ததாகக் கூறும் ஆவணங்களில் பலரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்தனர்.
    • அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்களின் குடும்பங்கள் இவர்கள்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி இறுதி வரை மகா கும்பமேளா நடைபெற்றது.

    அப்போது மௌனி அமாவாசை தினமான ஜனவரி 29 அன்று அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 37 பேர் இறந்ததாக உ.பி. அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பிபிசி நடத்திய ஆய்வில் அன்றைய தினம் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக பிபிசி செய்தியாளர்கள் 11 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து தகவல்களை பெற்றனர்.

    அதன்படி அவர்கள், ஜனவரி 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த 82 பேரின் உறவினர்கள் தெளிவான ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.

    இருப்பினும், உறுதியான ஆதாரங்கள் கிடைக்காததால், இன்னும் பல இறப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த புள்ளிவிவரங்களின்படி, குளிக்கும் இடத்தில் 30 பேரும், மற்ற இடங்களில் ஏழு பேரும் இறந்தனர். இறந்த 37 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் ஆதித்யநாத் அறிவித்தார்.

    பிபிசி நடத்திய விசாரணையில், முதலமைச்சர் அறிவித்த நிதியுதவியை 37 குடும்பங்கள் நேரடியாகப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. பணம் நேரடியாக அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது அல்லது காசோலைகள் வழங்கப்பட்டன.

    இருப்பினும், இது தவிர, 26 குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்தப் பணத்தை காவல்துறை அதிகாரிகள் வழங்கினர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்களின் குடும்பங்கள் இவர்கள். கூட்ட நெரிசலால் அல்ல, நோயால் இறந்ததாகக் கூறும் ஆவணங்களில் பலரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாகவும் அறிக்கை கூறுகிறது.

    இந்த சம்பவத்தில் இறந்த மேலும் 19 பேரின் குடும்பங்களையும் பிபிசி அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் யாருக்கும் அரசு உதவி கிடைக்கவில்லை.

    பிரேத பரிசோதனை அறிக்கைகள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பேரிடர் நடந்த இடத்தின் புகைப்படங்கள் உள்ளிட்ட சான்றுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டன. கூடுதலாக, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை பேரழிவின் அளவை விளக்குகின்றன.

    இந்த அறிக்கை வெளியானதன் மூலம், உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

    இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த தகவல்களை வெளியிடாததன் மூலம் அரசின் வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. 

    அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் கும்பமேளாவில் நடந்த மிகப்பெரிய சோகம், அரசு அமைப்பின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி உள்ளது.   

    • ரெயிலில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததே இந்த விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
    • இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் அதி மானோர் மின்சார ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். புறநகர் ரெயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கிறார்கள். இங்கு காலை, மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

    இன்று காலை தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயிலில் ஒன்று சென்று கொண்டி ருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக அந்த ரெயில் படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் கதவுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

    தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டு இருந்த போது படிக்கட்டுகளில் தொடங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.

    படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியி லேயே இறந்தனர். பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். காயம் அடைந்த 6 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    மும்பை ரெயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக தானே-மும்பை புறநகர் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஓடும் ரெயிலில் தவறி விழுந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து நீத விசாரணை நடத்த வேண்டும் என்று தானே தொகுதி சிவசேனா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

    • போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக மாநில அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
    • விராட் கோலி தனது உரையில் உயிரிழப்புகள் குறித்து பேசவில்லை.

    ஐபிஎல் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியை காண பலர் மைதானம் முன் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக மாநில அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மைதானத்திற்கு வெளியே இறப்புகள் ஏற்பட்டபோதும், உள்ளே ஆர்சிபி அணி தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சமூக ஊடகங்களில் எதிற்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.

    "மக்கள் கூட்ட நெரிசலில் இறந்து கொண்டிருக்கும் போது, வெற்றி கொண்டாட்டத்தில் அதைப் பற்றிய குறிப்பு கூட இல்லாமல் ஒளிபரப்பப்படுவது நம்பமுடியாததாக இருக்கிறது" என ஒரு எக்ஸ் பயனர் தெரிவித்துள்ளார்.

    "உயிரற்ற உடல்கள் சுற்றிக் கிடக்கும் போது கூட சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்டம்.. மனிதநேயம் எங்கே? இளைஞர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

    மரணத்திலும் அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இது அவமானகரமானது, கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. பொறுப்பானவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" என்று மற்றொரு பதிவில் கூறப்பட்டுள்ளது.

    விராட் கோலி தனது உரையில் உயிரிழப்புகள் குறித்து பேசாததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

    இதற்கிடையில், மைதானத்திற்குள் இருந்தவர்களுக்கு விபத்து குறித்து தெரியாது என்று பிசிசிஐ கூறுகிறது.

    இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கேட்டுக் கொண்டார். இதற்கு காரணம் ஏற்பாட்டாளர்கள் தான் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறினார். 

    • யானைகளில் ஒன்று திடீரென ஆக்கிரோஷமடைந்து ஓட்டமெடுத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • யானைப் பாகன்கள் உடனடியாக, யானையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகளில் ஒன்று திடீரென ஆக்கிரோஷமடைந்து ஓட்டமெடுத்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் படுகாயம் அடைந்தனர்.

    யானைப் பாகன்கள் உடனடியாக, யானையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    பாண்டி சமூஹா மடம் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் ஏற்பட்ட இச்சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது

    கூட்ட நெரிசலில் சிக்கி காயசமடைந்தவர்கள் மருத்துவமனையில் தெப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.
    • மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க பொதுகுழு உறுப்பி னர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் இல.சு.மணி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஆடுதுறை நசீர் முகமது, ஒன்றிய பொருளாளர் பரமசிவம், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.நாசர் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலா ளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு. கல்யாணசுந்தரம், மாநிலங்க ளவை உறுப்பினர் மு. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி. இரா. தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வன், மாநில அயலக அணி துணை செயலாளர் விஜயன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் துரைமுருகன், ஜெயலட்சுமி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் இராமபிரபு, சிவ.மணிமாறன், பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி பெருந்தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் துரை.மணிமாறன், சரபோஜி ராஜபுரம் கிளை செயலாளர் பழ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா ர்கள்.

    கூட்டத்தில் நடைபெற்று முடிந்த 15 வது தி.மு.க பொது தேர்தலில் மீண்டும் கழக தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினையும் அவர்களையும், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த பொது குழுவிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, தி.மு.க தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் சு.கல்யாணசுந்தரம் அவர்களையும், மாவட்ட கழக நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்த தி.மு.க தலைவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்க ளை தெரிவித்து கொள்வதெனவும், புதிய உறுப்பினர்களை கிளைகள் தோறும் அதிக அளவில் சேர்ப்பது என்றும்.

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி முகவர்க ளையும், வாக்குச்சாவடிக்கு 10 உறுப்பினர்கள் கொண்ட நிலை குழு உறுப்பினராக இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிப்பது எனவும், கிளை கழகம் தோறும் அனைத்து கிளைகளிலும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்துவது எனவும், மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.முடிவில் பாபநாசம் பேரூர் செயலாளர் ச.கபிலன் நன்றி கூறினார்.

    • தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.
    • மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.

    எனவே தஞ்சை மாநகர கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டி பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப ல்கலைக்கழகவளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ்நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சி க்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×