என் மலர்
இந்தியா

ஆந்திரா: கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு - நிவாரணம் அறிவித்த பிரதமர்
- கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டநெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.






