என் மலர்tooltip icon

    இந்தியா

    காவல்துறையினர் ஒன்றும் மந்திரவாதிகள் இல்லை.. கூட்டநெரிசல் விவகாரத்தில் ஆர்சிபி மீது  தீர்ப்பாயம் பாய்ச்சல்
    X

    காவல்துறையினர் ஒன்றும் மந்திரவாதிகள் இல்லை.. கூட்டநெரிசல் விவகாரத்தில் ஆர்சிபி மீது தீர்ப்பாயம் பாய்ச்சல்

    • இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது.
    • அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை.

    ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவaடுக்கப்பட்டது.

    இந்நிலையி்ல் இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி தான் பொறுப்பு என்று தெளிவுபடுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தில் காவல்துறையினரை ஆதரித்த தீர்ப்பாயம், அவர்களும் மனிதர்கள்தான், கடவுள்களோ மந்திரவாதிகளோ அல்ல என்று கூறியது. அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை என்றும், விரலால் தேய்த்தால் எந்த விருப்பத்தையும் நிறைவேற்ற முடியாது என்றும் கூறியது.

    மூன்று முதல் நான்கு லட்சம் பேர் வருகை தந்ததற்கும், காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதி பெறாததற்கும் ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும். சமூக ஊடகங்களில் பதிவுகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்ததாக தீர்ப்பாயம் கூறியது.

    மேலும் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு மூத்த ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமாரை இடைநீக்கம் செய்த அரசின் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

    Next Story
    ×