என் மலர்
நீங்கள் தேடியது "கூட்டநெரிசல்"
- கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர்.
- இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்து முயன்றதால் பலர் கீழே விழுந்து மிதிபட்டு காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ரெயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர் சிகிச்சைக்காக பர்தாமன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டிகை கால கூட்டம் காரணமாக ரெயில் நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
- சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
- தங்கள் இடைநீக்கத்தை நீக்கக் கோரி அதிகாரிகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
ஐபிஎல் 2025 போட்டியில் ஆர்சிபி வென்றதை கொண்டாடும்போது ஜூன் 4 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக சித்தராமையா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, காவல் ஆணையர் பி. தயானந்தா, கூடுதல் காவல் ஆணையர் விகாஸ் குமார் விகாஸ் மற்றும் துணை காவல் ஆணையர் சேகர் எச். தேக்கண்ணவர், காவல் உதவி ஆணையராகப் பணியாற்றிய டி.எஸ்.பி சி. பாலகிருஷ்ணா மற்றும் கப்பன் பார்க் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான நீதித்துறை ஆணையமும், மாவட்ட நீதிபதி குழுவும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து, அரசாங்கத்திடம் அறிக்கைகளை சமர்ப்பித்ததால், தங்கள் இடைநீக்கத்தை நீக்கக் கோரி அதிகாரிகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அறிக்கையை கருத்தில் கொண்டு, அதிகாரிகளின் இடைநீக்க உத்தரவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் அவர்களின் இடைநீக்கத்தை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.
- இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது.
- அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை.
ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவaடுக்கப்பட்டது.
இந்நிலையி்ல் இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி தான் பொறுப்பு என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் காவல்துறையினரை ஆதரித்த தீர்ப்பாயம், அவர்களும் மனிதர்கள்தான், கடவுள்களோ மந்திரவாதிகளோ அல்ல என்று கூறியது. அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை என்றும், விரலால் தேய்த்தால் எந்த விருப்பத்தையும் நிறைவேற்ற முடியாது என்றும் கூறியது.
மூன்று முதல் நான்கு லட்சம் பேர் வருகை தந்ததற்கும், காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதி பெறாததற்கும் ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும். சமூக ஊடகங்களில் பதிவுகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்ததாக தீர்ப்பாயம் கூறியது.
மேலும் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு மூத்த ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமாரை இடைநீக்கம் செய்த அரசின் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
- கூட்ட நெரிசலால் அல்ல, நோயால் இறந்ததாகக் கூறும் ஆவணங்களில் பலரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்தனர்.
- அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்களின் குடும்பங்கள் இவர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி இறுதி வரை மகா கும்பமேளா நடைபெற்றது.
அப்போது மௌனி அமாவாசை தினமான ஜனவரி 29 அன்று அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 37 பேர் இறந்ததாக உ.பி. அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பிபிசி நடத்திய ஆய்வில் அன்றைய தினம் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பிபிசி செய்தியாளர்கள் 11 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து தகவல்களை பெற்றனர்.
அதன்படி அவர்கள், ஜனவரி 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த 82 பேரின் உறவினர்கள் தெளிவான ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
இருப்பினும், உறுதியான ஆதாரங்கள் கிடைக்காததால், இன்னும் பல இறப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த புள்ளிவிவரங்களின்படி, குளிக்கும் இடத்தில் 30 பேரும், மற்ற இடங்களில் ஏழு பேரும் இறந்தனர். இறந்த 37 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் ஆதித்யநாத் அறிவித்தார்.

பிபிசி நடத்திய விசாரணையில், முதலமைச்சர் அறிவித்த நிதியுதவியை 37 குடும்பங்கள் நேரடியாகப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது. பணம் நேரடியாக அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது அல்லது காசோலைகள் வழங்கப்பட்டன.
இருப்பினும், இது தவிர, 26 குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்தப் பணத்தை காவல்துறை அதிகாரிகள் வழங்கினர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்களின் குடும்பங்கள் இவர்கள். கூட்ட நெரிசலால் அல்ல, நோயால் இறந்ததாகக் கூறும் ஆவணங்களில் பலரை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் இறந்த மேலும் 19 பேரின் குடும்பங்களையும் பிபிசி அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் யாருக்கும் அரசு உதவி கிடைக்கவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கைகள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பேரிடர் நடந்த இடத்தின் புகைப்படங்கள் உள்ளிட்ட சான்றுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டன. கூடுதலாக, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை பேரழிவின் அளவை விளக்குகின்றன.
இந்த அறிக்கை வெளியானதன் மூலம், உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த தகவல்களை வெளியிடாததன் மூலம் அரசின் வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.
அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் கும்பமேளாவில் நடந்த மிகப்பெரிய சோகம், அரசு அமைப்பின் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
- மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
- இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு:
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது.
மறுநாள் பெங்களூரு விதான சவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இச்சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அறிவித்த இழப்பீடு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
- ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
- ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. பலரும் இந்த கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பெங்களூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- உடைந்து போன இதயத்தின் எமோஜியை வெளியிட்டுள்ளார்.
- பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்சும், எக்ஸ் தளத்தில் வருத்தியுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "வார்த்தைகளை இழந்து நிற்கிறேன். முற்றிலும் மனமுடைந்து போனேன்" என்று குறிப்பிட்டு ஆர்சிபி அணி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை பகிர்ந்துள்ளார்.
கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், அவருடைய இன்ஸ்டாகிராமில் அந்த அறிக்கையை பகிர்ந்து, உடைந்து போன இதயத்தின் எமோஜியை வெளியிட்டு உள்ளார்.
இதேபோன்று, பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்சும், எக்ஸ் தளத்தில் வருத்தியுள்ளார்.
முன்னதாக உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும், மைதானத்தினுள்ளே வெற்றி கொண்டாட்டத்தை ஆர்சிபி தொடர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- ஊடக அறிக்கைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையறிந்துள்ளோம்.
- எங்கள் ரசிகர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஐபிஎல் பட்டத்தை ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை காண பலர் மைதானம் முன் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெளியே உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் உள்ளே வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியதாக ஆர்சிபி அணி மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஆர்சிபி அணி கூட்ட நெரிசலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"இன்று பிற்பகல் அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூருவில் கூடிய கூட்டத்தில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்ததாக ஊடக அறிக்கைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையறிந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
துயரமான உயிர் இழப்புக்கு ஆர்சிவி இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
நிலைமை குறித்து உடனடியாகத் தெரியவந்தவுடன், நாங்கள் உடனடியாக எங்கள் திட்டத்தைத் மாற்றியமைத்து, உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பின்பற்றினோம்.
எங்கள் ரசிகர்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக மாநில அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
- விராட் கோலி தனது உரையில் உயிரிழப்புகள் குறித்து பேசவில்லை.
ஐபிஎல் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை காண பலர் மைதானம் முன் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக மாநில அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மைதானத்திற்கு வெளியே இறப்புகள் ஏற்பட்டபோதும், உள்ளே ஆர்சிபி அணி தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சமூக ஊடகங்களில் எதிற்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.
"மக்கள் கூட்ட நெரிசலில் இறந்து கொண்டிருக்கும் போது, வெற்றி கொண்டாட்டத்தில் அதைப் பற்றிய குறிப்பு கூட இல்லாமல் ஒளிபரப்பப்படுவது நம்பமுடியாததாக இருக்கிறது" என ஒரு எக்ஸ் பயனர் தெரிவித்துள்ளார்.
"உயிரற்ற உடல்கள் சுற்றிக் கிடக்கும் போது கூட சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்டம்.. மனிதநேயம் எங்கே? இளைஞர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
மரணத்திலும் அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இது அவமானகரமானது, கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. பொறுப்பானவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" என்று மற்றொரு பதிவில் கூறப்பட்டுள்ளது.
விராட் கோலி தனது உரையில் உயிரிழப்புகள் குறித்து பேசாததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மைதானத்திற்குள் இருந்தவர்களுக்கு விபத்து குறித்து தெரியாது என்று பிசிசிஐ கூறுகிறது.
இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கேட்டுக் கொண்டார். இதற்கு காரணம் ஏற்பாட்டாளர்கள் தான் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறினார்.
- ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது.
- கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூர் வெற்றிப் பேரணியில் உயிரிழந்த 13 பேருக்கு ஆழ்ந்த இரங்கல்.
ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 13 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது. அதன்பின் 12 மணி நேர அவகாசத்தில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில் அவர்களின் உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
- கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர் நகர், குண்டலகேசி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். மாநகர பஸ் கண்டக்டராக உள்ளார். இவரது மனைவி ராஜ லட்சுமி. இவர் கடந்த மாதம் 23ந் தேதி வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் தான் அணிந்திருந்த 18பவுன் நகைகளை கழட்டி கைப்பையில் போட்டுக் கொண்டு கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ் (தடம் எண்70வி) மூலம் வீடு திரும்பினார்.
ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய ராஜலட்சுமி நகைகளுடன் தனது கைப்பை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை சுருட்டி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்மு போலீஸ்காரர் விக்ரம் தலைமையிலான தனிப்படை போலீசார் கோயம்பேடு முதல் வண்டலூர் வரை உள்ள மாநகர பஸ் நிறுத்தங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது நகை கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விமலா (30) என்பது தெரிந்தது. வேலூரில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விமலா கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களை குறிவைத்து கொள்ளை அடிப்பவர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இவரை போன்று மேலும் பல பெண்கள் பஸ்களில் கைவரிசை காட்டுவதற்காக சென்னை மாநகருக்குள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சில்லரையை சிதறிவிட்டு கவனத்தை திசை திருப்பி இந்த பெண்கள் கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.
எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விமலா வும் சில்லரையை சிதற விட்டுத்தான் நகையை அபேஸ் செய்துள்ளார்.
இவரைப் போன்று ஆந்திராவை சேர்ந்த 6 பெண்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாகவும், எனவே மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து ஒன்றாக புறப்பட்டு சென்னைக்கு வரும் இவர்கள் பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று கைவரிசை காட்டு வார்கள். காலையில் இருந்து இரவு வரையில் கிடைப்பதை சுருட்டிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்று விடுவார்கள்.
விமலாவை போன்று சென்னை மாநகர பஸ்களில் கைவரிசை காட்டிவரும் மற்ற பெண்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.
- கூட்டநெரிசலில் திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.
விபத்தில் சிக்கிய தனி நபர்களின் கதைகள் மனதை ரணமாக்குவதாக உள்ளன. டிரக்கில் கிடத்தப்பட்ட 6 சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவர் அங்கு உள்ள தனது குழந்தையின் உடலை வெளியே எடுக்க உதவி கேட்டு அழுகிறார். படுகாயமடைந்த பலர் மருத்துவமனை நுழைவிடத்தில் கிடத்தப்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட போதுமான வசதிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் ஓருவர் மீது ஒருவர் உயிரிழந்த உடல்களைப் போல் கிடக்கும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவித்திருக்கும் நிலையில் முதலில், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
கூட்ட நெரிசலில் உயிர்பிழைத்தவர்கள் சொல்லும் விவரங்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபா அமர்ந்திருந்த இடத்தின் காலடி மண்ணை எடுக்க பலர் காத்திருந்தனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தனது தாய், மனைவி, 16 வயது மகள் ஆகிய மூவரையும் இழந்த வினோத் என்பவர் கூறுகையில், 'நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். அவர்கள் வெளியே ஒன்றாக வெளியே சென்றனர் என்பது மட்டுமே எனக்கு தெரியும், ஆனால் இங்கே வந்தது தெரியாது. இந்த விபத்தை கேள்விப்பட்டு அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வந்து தேடியபோது எனது மனைவி மகள் உடல்களை கண்டெடுத்தேன். எனது தாயின் உடல் கிடைக்கவே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
மகளைத் தொலைத்த தாய் ஒருவர் கூறுகையில், எனது மகளால் பேச முடியாது அழ மட்டுமே முடியும் அவளை எங்கு தேடியும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தேடியபடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார்.
குழந்தைகளை இழந்த தாய்மார்கள், தாய்மார்களை இழந்த குழந்தைகள் என பலர் இந்த சம்பவத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். பல வருடங்களாக போலே பாபாவின் சத்சங்கத்தை கேட்க வந்துகொண்டிருந்தவர்களே இந்த கூட்டத்தில் அதிகம். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலே பாபா தலைமறைவாகியுள்ளார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.






