search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctors"

    • மத்திய அரசு மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகளுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    • ஒரு டாக்டரை அணுகுவதற்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு தடைவிதிக்கும் வகையில் மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான சீரான விதிமுறையை தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. இனி மருந்து நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய விவரங்கள் வருமாறு:

    டாக்டர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்கள் பரிசுகள் வழங்கக் கூடாது.

    ஒரு டாக்டரை அணுகுவதற்கு அவர்களுக்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக் கூடாது.


    மருந்துகளைப் பரிந்துரைக்க தகுதி இல்லாதவர்களுக்கு இலவச மாதிரிகள் வழங்கக் கூடாது.

    தங்கும் விடுதி, ஓய்வு விடுதி, விலை உயர்ந்த உணவு போன்ற எந்தவொரு விருந்தோம்பலையும் வழங்கக் கூடாது.

    கருத்தரங்கம், மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்கு உள்நாட்டு அல்லது வெளிநாடுகளுக்கான பயண வசதிகளை வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    • ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.
    • ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஷேக் முஜீப் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.

    இதுகுறித்து ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    ஆஸ்பத்திரியில் எங்கு பார்த்தாலும் எலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அவர்களின் அலட்சியத்தால் தான் ஷேக் முஜிப்பை எலிகள் கடித்ததாக தெரிவித்தனர்.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் காவியா, பொது மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமார் மற்றும் நர்ஸ் மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் எலிகளைப் பிடிக்க ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்படும். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

    • கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை இயக்குனர், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குனர், மருத்துவம், ஊரக நல பணிகள் துறை இயக்குனர் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    • அரசு மருத்துவமனைகளில் காலியாக டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தமிழகத்தில் தற்போது எந்த நோய் பரவலும் இல்லை.

    சென்னை:

    சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுடன் மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடம் மற்றும் அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விடுதி கட்டிடம் ஆகியவற்றிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.197.14 கோடி மதிப்பில் நவீன கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் காலியாக டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக 1021 மருத்துவர்கள் 20 மாவட்டங்களில் நியமிக்கப்படுகிறார்கள்.

    டாக்டர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு 3-ந்தேதி நடைபெறுகிறது. 4-ந்தேதி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. மகளிருக்கு சலுகை விலையில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் தற்போது எந்த நோய் பரவலும் இல்லை. டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 15 வருடங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. மழை, வெள்ளம் பாதிப்பு இருந்த போதும்கூட தொற்று நோய் பரவவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும்.
    • முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்க வேண்டும் என்றார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில ஐகோர்ட்டில் ஒருவர் தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார்.

    வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி, அந்த டாக்டரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது:

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.

    அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தரவேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

    • எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை.
    • காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் அதிகரித்ததற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு ஐந்தாண்டுகளில் முதன் முறையாக இப்போது தான் மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்குப் பிறகு எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஏற்பட்டுள்ள காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும். அது தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் அளிக்கும். எனவே, மக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றம்.
    • ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்கள்.

    சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்து விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சிடையந்த அந்த பெண் பயந்துபோய் உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார்.

    ஆனால், அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். மொத்தத்தில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை அகற்றியதாக பெண் மிரர் தெரிவித்துள்ளார்.

    பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

    இருப்பினும், நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து புழுக்களை தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அந்த பெண் கருதுகிறார். அவற்றின் உடலில் தொற்று லார்வாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. விலங்குகளைத் தொடுவதும், கண்களைத் தேய்ப்பதும் தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று மிரர் கூறினார்.

    எஞ்சியிருக்கும் லார்வாக்களின் சாத்தியக்கூறுகளை கண்காணிக்க அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மருத்துவர்கள் அந்தப் பெண்ணை வலியுறுத்தியுள்ளனர்.

    • நீரிழிவு நோயை தடுக்க சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிக்க ேவண்டும்.
    • மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வலியுறுத்தினர்.

    மதுரை

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்தி ரியில் டாக்டர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. அதில் நீரிழிவு துறையின் முதுநிலை டாக்டர் மகேஷ் பாபு துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மருத்துவமனை நிர் வாகி டாக்டர் கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் 10 கோடிக்கும் அதிக மான மக்களை நீரிழிவு நோய் பாதித் துள்ளது. ஆனாலும் நாட்டில் 50 சத வீதத்திற்கும் அதிகமான நோய் பாதிப் புகள் கண்டறியப்படாத நிலை உள்ளது. இது நீரிழிவு நோய் சுமையைக் குறைப்ப தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    ஒவ்வொரு தனிநபரும் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். மர பணு ரீதியாக இந்த நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் அதன் விளை வுகளை புரிந்துகொண்டு தகுந்த நடவ டிக்கை எடுப்பதன் மூலம் அதில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். நீரிழிவு நோயை முழுமையாக மதிப்பீடுவதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு பின், ஹீமோகுளோபின் ஏ1சி நிலை பரிசோதனை ஆகிய 3 வகையான ரத்த பரிசோதனைகள் முக்கியம்.

    நீரிழிவு நோயை தடுக்க மக்கள் இள மையாக இருக்கும்போதே சுறுசுறுப் பான வாழ்க்கை முறையை மேற் கொள்ள வேண்டும். குறைந்தது 45 நிமிடங்க ளாவது நீச்சல், ஜாகிங் அல் லது நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் செய்வது முக்கியம். யோகா மற்றும் தியான பயிற்சி செய்வது மிக ஆபத்தான நோய் காரணியாக இருக்கக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக் கும். நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ள மக்கள் கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள உணவு களை எடுத்துக் கொள்ள பழகுவது நல்லது.

    சமச்சீர் உணவு, வழக்கமான உடற்பயிற்சி, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை கள் மூலம் நீரிழிவு நோயை எந்த நிலையிலும் நிர்வகிக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
    • அங்கி அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில், பி. பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங்கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் ஏறத்தாழ 2 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த அரசாணையை மதிப்பாய்வு செய்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    அதேநேரத்தில், தற்போதைய அரசு ஊதிய உயர்வுக்காக கொண்டு வந்த அரசாணை 293-ல் சங்கங்கள் கோரிய மாற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை அரசுக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய பிறகும், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 16-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்துவது என அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றனர்.

    • முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் குருசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
    • சித்த மருத்துவ பிரிவு சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    தற்போது பருவமழை பெய்து வருவதால் மழைக்கால காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி ஆலோச னையின் பேரில் சாத்தான்குளம் வட்டாரத்தில் வாலத்தூர், பொத்தகாலன்விளை, மனோ ரம்மியபுரம், சங்கரன் குடியிருப்பு, புத்தன்தருவை, பெரியதாழை ஆகிய 6 இடங்களில் மழைக்கால சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது .

    முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் குருசாமி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். காய்ச்சல் போன்ற சிறு உபாதைகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமான நோயாளிகள் பயன்பெற்றனர். சித்த மருத்துவ பிரிவு சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    முகாமில் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், கிராம சுகாதார செவிலியர் மாலதி, செவிலியர் பவித்ரா, மக்களை தேடி மருத்துவ திட்ட செவிலியர் ஷேர்லி, ஆஷா பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிராம ஊராட்சி மூலம் ஓட்டு மொத்த துப்புரவு பணி செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது .குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. வாலத்தூர், பொத்தகாலன் விளை கிராம பகுதிகளில் டெங்கு மஸ்தூர் பணியா ளர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணியும் மேற்கொள் ளப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் இதே போன்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

    • அயன் பொம்மையாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு பொருள்களும், மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன் பொம்மையாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் மருத்துவர் சஞ்சீவிராஜ் அறிவுறுத்தலின்படி கோவில்பட்டி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் விஜய் ஸ்ரீ தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி முன்னிலையில் விளாத்திகுளம் கால்நடை மருத்துவ குழுவினர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோர் இணைந்து சுமார் 1085-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.

    இம்முகாமில் கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு பொருள்களும், மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. மேலும் இம்முகாம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக பங்கேற்ற பொதுமக்கள் பாராட்டினர். முகாமில் கால்நடை மருத்துவர் கருப்பசாமி, பாலமுருகன், புவனேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மோதியது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பூதலூர்:

    திருச்சி மாவட்டம் லால்குடி தாலூகா டி.கல்விக்குடி மேலகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 19).

    இவர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பூண்டிக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் உணவை பார்சல் வாங்கி கொண்டு திரும்பி சென்றார்.

    பூண்டி அருகே உள்ள கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அருகே இருந்தவர்கள் திருக்காட்டுபள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீசார் பிரேதத்தைப் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×