என் மலர்
நீங்கள் தேடியது "ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம்"
- ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம்
- இதற்கு மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளித்து, அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்ற மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் ஜூன் 30 அன்று வெளியிட்ட அறிவிப்பில் ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவத்தில் பயிற்சி பெறுவதற்காக நவீன மருந்தியலில் சான்றிதழ் படிப்பை (CCMP) படிக்க மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
அதாவது ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகாராஷ்டிர அரசியல் தலைவர்கள், பல ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள், அவர்களின் அழுத்தத்தால் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் சந்தோஷ் தெரிவித்தார்.
- ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் சிந்தசிஸ் தேனி-2023 மருத்துவ கண்காட்சி தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
- இந்த கண்காட்சியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் என 11 அரங்குகள் பார்வைக்கு அமைக்கப்பட்டிருந்தன.
தேனி:
தேனி மாவட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் சிந்தசிஸ் தேனி-2023 மருத்துவ கண்காட்சி தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. கண்காட்சிக்கு தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் ஹனிமன், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை அதிகாரி ராமசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் ஆலோசகர், முன்னாள் தலைவர் ஜவஹர், தேனி ஆயுஷ் மருத்துவமனை மாரியப்பன், கன்னியாகுமரி மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் சங்கம் செயலாளர்எபிமோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் என 11 அரங்குகள் பார்வைக்கு அமைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியில் மதுரை அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர்கள் பாவலன், ஞானபிரகாசம், தேனி ஹோமியோபதி சங்க தலைவர் ஹனிமன் ஹோமியோ மருத்துவமனை சரவணன், செயலாளர் நாராயணன், பொருளாளர் விஜயராஜன் உள்பட தமிழகத்தில் இருந்து ஏராளமான ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தியாகராஜன், ராஜ்குமார், கார்த்திகேயன், மரகதம் விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.






